Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 போட்டிகளில் 4 பரிசோதனை.. ஜடேஜாவுக்கு மாற்று வீரரை கண்டுபிடிக்கும் முயற்சி.. இவ்வளவு ரிஸ்க்கா??

மும்பை: ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்காக 4 வித்தியாசமான முயற்சிகளை ரோகித் சர்மா செய்து பார்க்கவுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

ஆசிய கோப்பை தொடரிலும் ஜடேஜா இல்லாததால் இந்திய அணிக்கு பெரிய குழப்பங்கள் உண்டாகியிருந்தன. எனவே டி20 உலகக்கோப்பை தொடரில் ஜடேஜாவுக்கு சரியான மாற்றை கண்டுபிடித்தாக வேண்டிய சூழலில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் உள்ளனர். இதற்காக இனி வரவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் பரிசோதனை செய்கின்றனர்.

நிரூபிப்பாரா ஹூடா

நிரூபிப்பாரா ஹூடா

ஜடேஜாவின் இடத்தில் தீபக் ஹூடாவை பயன்படுத்தி பார்ப்பார்கள். ஹூடாவை சேர்ப்பதால் இந்தியாவின் பேட்டிங் நீளம் அதிகரிக்கும். இதே போல அவரை சுழற்பந்துவீச்சுக்கும் பயன்படுத்தினால். ஆசிய கோப்பையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் சொதப்பியதால், சோதனை முயற்சியில் நிரூபித்து காட்டினால் மட்டுமே வாய்ப்பு.

அக்‌ஷர்

அக்‌ஷர்

ஜடேஜாவுக்கு சரியான மாற்றாக பார்க்கப்படுவர் அக்‌ஷர் பட்டேல். சுழற்பந்துவீச்சு ஸ்பெஷலிஸ்ட்டாக செயல்படும் போதிலும், அக்‌ஷர் பட்டேலை லோயர் ஆர்டரில் மட்டுமே பேட்டிங்கிற்கு பயன்படுத்த முடிகிறது. இதுவே ஜடேஜாவாக இருந்தால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறங்கி அசத்துவார். எனவே அக்‌ஷருக்கு டாப் ஆர்டரில் பயிற்சி தரவுள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

அக்‌ஷர் பட்டேலை விட பேட்டிங்கிலும் சிறப்பாக இருக்கக்கூடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார் போன்றவர்கள் சற்று பேட்டிங்கிற்கு உதவுவார்கள் என்றால் அஸ்வினை ஜடேஜாவுக்கு மாற்றாக களமிறங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஆசிய கோப்பையிலேயே அஸ்வின் தனது பேட்டிங் திறமையை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்று வீரரே இல்லையா?

மாற்று வீரரே இல்லையா?

ஒருவேளை ஜடேஜாவுக்கு மாற்றாக யாரும் கிடைக்கவில்லை என்றால், முழு நேர ஸ்பின்னர்கள் 2 பேர், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடலாம். அதாவது ஹர்திக் பாண்ட்யா 5வது பவுலராக சிறப்பாக முழுவதுமாக ஓவர் வீச வேண்டும். இப்படி நடந்தால், பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என மூன்று பேருமே அணியில் இடம்பிடிப்பார்கள்.

Story first published: Friday, September 16, 2022, 11:18 [IST]
Other articles published on Sep 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+