
டாப் ஆர்டர் சொதப்பல்
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்ற போதும், இந்தியாவின் டாப் ஆர்டர் பிரச்சினை தீரவில்லை. இந்த போட்டியில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானிடம் இந்திய டாப் ஆர்டர் சொதப்பியது. குறிப்பாக ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் சாஹீன் அஃப்ரிடியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் தான் 31 ரன்களுக்குள் 4 விக்கெட்கள் சரிந்தது.

சீனியர் வீரர் விமர்சனம்
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சோயிப் அக்தர், இந்திய அணியின் ஓப்பனர்கள் மிகவும் பதற்றமாகவும், பயந்தும் இருந்தனர். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக நிதானமாக இருக்க வேண்டும். அவரின் அழுத்தம் பேட்டிங்கிலேயே தெரிந்தது. கே.எல்.ராகுல் பொரியில் எலியில் சிக்கியது போல் சிக்கிக்கொண்டார்.

மாற்றம் வேண்டும்
அவர் சரியாக பேட்டிங் செய்ய வேண்டும், அவுட்டாகிவிடக்கூடாது என மிகவும் ஜாக்கிரதையாக இருந்ததே அவருக்கு எமனாக மாறிவிட்டது. அதனை பயன்படுத்தியே பாகிஸ்தான் பவுலர்கள் திட்டம் தீட்டி வெளியேற்றினர். இதனை மாற்றிக்கொண்டே தீர வேண்டும் என சோயிப் அக்தர் கூறினார்.

அடுத்த ஆட்டம்
இந்திய அணி அடுத்ததாக அயர்லாந்து அணியுடனான போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை ( அக்டோபர் 27) மதியம் நடைபெறவுள்ளது. சிறிய அணிதான் என்பதால் இந்திய அணி சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications