
இந்திய அணி போட்டி
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த அந்த போட்டியை அடுத்து இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இளம் வீரர்களை கொண்ட அந்த அணி தகுதிச்சுற்றில் முன்னணி அணிகளுக்கே சவால் கொடுத்துவிட்டு, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போட்டி எப்போது?
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த சுற்றுக்கு செல்வது சற்று சுலபமாக இருக்கும். எனவே கத்துக்குட்டி அணியை வீழ்த்த ரோகித் சர்மாவின் படை தயாராகி வருகிறது.

இந்திய அணி தோற்கலாம்
இந்நிலையில் நெதர்லாந்திடம் இந்தியா தோற்கலாம் என வல்லுநர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு காரணம் இன்று இங்கிலாந்து அணி சந்தித்த மோசமான விஷயங்கள் தான். அயர்லாந்து அணியுடனான லீக் போட்டியில் மிகவும் பலமான இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. இதற்கு காரணம் டி.ஆர்.எஸ் தான்.

என்ன நடந்தது
இங்கிலாந்து அணியின் சேஸிங்கின் போது திடீரென மழை குறிக்கிட்டது. இதனால் டி.ஆர்.எஸ் விதிமுறைப்படி 14.3 ஓவர்களில் 111 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டது. அவசர அவசரமாக ரன் வேகத்தை உயர்த்திய போதும், அந்த அணி விக்கெட்களை பறிகொடுத்தது. இதனால் குறிப்பிட்ட ஓவர்களில் 105 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதே போன்ற மழை பாதிப்பு நாளை இந்தியா அணியின் போட்டியிலும் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

எப்படி ?
இந்தியா -நெதர்லாந்து போட்டி நடைபெறும் சிட்னி நகரத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நாளைய தினமும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே ரன் ரேட்டை அதிகமாக வைத்திருக்கவில்லை என்றால் தோல்வியடையலாம் எனக்கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் நெதர்லாந்து அணி முதல் சுற்று போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications