Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பி வந்துட்டேனு சொல்லு.. இந்திய அணிக்குள் எண்ட்ரி தரும் ஸ்டார் வீரர்.. ரோகித் எடுத்த முடிவு!

சிட்னி: இந்திய அணி தனது அடுத்த போட்டியில் முக்கிய மாற்றத்தை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்திருந்தது. பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து தனது 2வது போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்தியாவின் 2வது போட்டி

இந்தியாவின் 2வது போட்டி

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நாளை ( அக்டோபர் 26) சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் கடைசி வரை சென்று வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது போட்டியில் சில மாற்றங்களை செய்யலாம் எனத்தெரிகிறது.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலமானதாக உள்ளது. பேட்டிங்கில் எந்தவித வீரருக்கும் ஓய்வு என்ற ஆலோசனைக்கூட நடைபெறவில்லை என பயிற்சியாளரே கூறியிருந்தார். சிறிய அணியுடனான போட்டி என்றாலும், அதில் ஹர்திக் பாண்ட்யா விளையாடியே தீர வேண்டும் எனக்கூறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பவுலிங் தான் மாற்றம் ஏற்படவுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

மெல்பேர்ன் மைதானத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த சூழலில், 2வது போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். கடைசியாக இங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து போட்டியில் கூட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோரின் சிறப்பான பவுலிங்கால் ஆஸ்திரேலியா 111 ரன்களுக்குள் சுருண்டது.

சேர்க்கப்படும் சாஹல்

சேர்க்கப்படும் சாஹல்

எனவே இந்தியாவின் விக்கெட் டேக்கிங் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் மீண்டும் அணிக்குள் வருவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சாஹலின் பவுலிங் சரியில்லை. எனவே அவர் ஃபார்முக்கு திரும்புவதற்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங் ஆலம் பெரிதாக தேவைப்படாது என்பதால் அஸ்வின் அல்லது அக்‌ஷர் பட்டேல் ஆகியோரில் யாரோ ஒருவர் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்படலாம்.

Story first published: Wednesday, October 26, 2022, 19:49 [IST]
Other articles published on Oct 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+