அமெரிக்காவில் பயிற்சி செய்யும் இந்திய வீரர்கள்.. ஐசிசியிடம் இருந்து 2 வீரர்களுக்கு கிடைத்த பரிசு
மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தற்போது அமெரிக்காவில் பயிற்சி செய்து வருகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வரும் ஒன்றாம் தேதி வங்கதேசத்துடன் பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறது.
இதை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி இந்திய நேரப்படி எட்டு மணிக்கு அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது பயிற்சி செய்து வந்த இந்திய வீரர்களின் இருவருக்கு ஐசிசி இடம் இருந்து திடீரென்று ஒரு ஆச்சரிய பரிசு கிடைத்திருக்கிறது.

அதாவது 2023 ஆம் ஆண்டு டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ், தொடர்ந்து முதலிடத்தில் பிடித்திருக்கிறார். சூரிய குமார் யாதவ் 2023 ஆம் ஆண்டு இரண்டு சதம், ஐந்து அரை சதம் என மொத்தமாக 17 இன்னிங்ஸில் 733 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 48 ரன்கள் ஆகும்.
155 என்று அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது. இதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் என்ற பரிசு ஏற்கனவே சூரிய குமாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கான பரிசு மற்றும் ஸ்பெசல் தொப்பியை இன்று ஐசிசி வழங்கியது. இதனை வாங்கிய சூரியகுமார் யாதவ், இந்த விருது கிடைத்ததற்கு நன்றியுடன் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஐசிசி இடமிருந்து பரிசு கிடைத்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இதற்கான ஸ்பெஷல் தொப்பி, ஐசிசி இடமிருந்து இன்று வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜடேஜாவுக்கு வழங்கினார்.
இதனை புகைப்படமாக பதிவிட்டுள்ள ஜடேஜா, ஸ்பெஷல் மனிதரிடமிருந்து ஸ்பெஷலான இந்த விருதை வாங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 தொடரில் ஜடேஜா 14 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளில் வீழ்த்தினார். இதேபோன்று பேட்டிங்கில் 11 இன்னிங்ஸில் 267 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 142 ஆகும். இந்த சூழலில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஜடேஜாவின் பங்கு மிக முக்கியமாகும்.


Click it and Unblock the Notifications