Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையின் சிறந்த 11 வீரர்கள் யார்? 3 இந்தியர்களுக்கு இடம்.. ரோகித் கேப்டன் கிடையாது!

பார்படாஸ்: 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் தோல்வியை தழுவாமல் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு 50 ஒவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தற்போது ரோகித் பதிலடி கொடுத்திருக்கிறார். இதனிடையே, 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை ஒரு அணியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து இருக்கிறது. இதில் எந்த வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்? யார் கேப்டன் என்பதை தற்போது பார்க்கலாம்.

T20 world cup ind vs sa rohit sharma

இந்த அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 255 ரன்கள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதேபோன்று மூன்றாவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

நான்காவது வீரராக அமெரிக்காவை சேர்ந்த ஆரோன் ஜோன்ஸ்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நடு வரிசையில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆறாவது இடத்தில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் கிடைத்திருக்கிறது.

ஏழாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரசித் கானுக்கும், எட்டாவது வீரர் ரிசாத் உசேனுக்கும் ஒன்பதாவது வீரராக தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் நோக்கியாவுக்கும்,பத்தாவது வீரராக இந்திய அணியின் ஸ்டார் வேக பந்துவீச்சாளர் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 11வது வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த அணியில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாமல் ரசித் கானுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்த நிலையில், அந்த கோபத்தினால் தான் ரசீத் கானுக்கு கேப்டன் பதவியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வழங்கியிருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Sunday, June 30, 2024, 12:10 [IST]
Other articles published on Jun 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+