அப்படி வாங்க வழிக்கு.. செம குட் நியூஸ் சொன்ன ஹாட்ஸ்டார்.. 4 மாசத்துக்கு இலவசம்.. ஜியோவுடன் கூட்டு
மும்பை : கிரிக்கெட் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்து வரும் ஹாட்ஸ்டார் செயலி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் மொபைலில் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்து இருக்கிறது.
ஜூன் 2 முதல் முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரை மொபைல் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரையும் இதே போல இலவசமாக ஒளிபரப்பியது ஹாட்ஸ்டார்.

மார்ச் 23 முதல் ஐபிஎல் தொடரை ஜியோசினிமா இலவசமாக ஒளிபரப்ப உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடரை ஹாட்ஸ்டார் இலவசமாக ஒளிபரப்ப உள்ளது. எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மூன்று மாதம் முழுவதும் தினமும் கிரிக்கெட் போட்டிகளை தங்கள் மொபைலில் இலவசமாக கண்டு களிக்கலாம்.
ஐபிஎல் தொடர் உரிமையை ஜியோசினிமா வாங்கும் வரை ஹாட்ஸ்டார் செயலியில் கிரிக்கெட் போட்டிகளை காண பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால், ஜியோசினிமா ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பியதால் அதிக ரசிகர்கள் நேரலையில் போட்டிகளை கண்டு களித்ததால் விளம்பர வருவாய் மூலம் கூடுதலாக லாபமடைந்தது ஜியோ சினிமா. அதே பாணியை ஹாட்ஸ்டாரும் பின்பற்றத் துவங்கி இருக்கிறது. மேலும், ஜியோ சினிமாவை விட ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு தரமாக இருப்பதாக ரசிகர்கள் கருதுவதால் நேரலையில் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அதற்கு பல மொழிகளில் முன்னாள் வீரர்களை கொண்டு வர்ணனை செய்வதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
எல்லை மீறிப் போய்கிட்டு இருக்கீங்க.. இந்திய அணியில் நடக்கும் தவறு.. விளாசிய முன்னாள் வீரர்
அதே வழியை பின்பற்ற முடிவு செய்த ஹாட்ஸ்டார் கடந்த ஓராண்டாக அனைத்து கிரிக்கெட் தொடர்களையும் மொபைலில் மட்டும் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது. தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடன் இணைத்துக் கொண்டு இருக்கிறது. எனினும், நடைமுறையில் இரண்டு நிறுவனங்களும் இணைய இன்னும் ஓராண்டு ஆகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications