Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் பாஜக ஆட்சி! அப்போ இம்முறையும் இந்திய அணிக்கு உலககோப்பை கிடையாதா? கலாய்க்கும் ரசிகர்கள்

மும்பை : நாடாளுமன்றத் தேர்தல் முடிவு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அதை வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.பாஜக அரசு ஆட்சியில் தொடர்வதற்கும் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கலாய்ப்பதற்கும் என்ன தொடர்பு என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றிருக்கிறது. இதேபோன்று 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது. இந்த நிலையில் இந்திய அணி இதுபோல் உலக கோப்பையை வென்ற போதெல்லாம் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில் ஆட்சியில் அமைந்து இருக்கிறது.

lok sabha election bcci jay shah india national cricket team rohit sharma virat kohli 2024

பாஜக ஆட்சியில் இந்திய கிரிக்கெட் அணி ஒருமுறை கூட உலகக்கோப்பை வென்றது கிடையாது. உதாரணத்திற்கு 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. நிச்சயமாக 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த போட்டி மறந்திருக்காது.

அப்போதும் பாஜக தான் ஆட்சியில் இருந்தது. இதேபோன்று 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 உலகக் கோப்பையில் தொடர் வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டி வரை வந்த இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. அப்போதும் மத்தியில் பாஜக அரசுதான் ஆட்சியில் இருந்தது. இதை சுட்டி காட்டி தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இந்திய அணி உலக கோப்பை வெல்லாது என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது.

இதனால் கடந்த வரலாற்றை ஒப்பிட்டு இம்முறையும் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல முடியாது என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே ஜெயிஷா இந்திய அணி t20 உலக கோப்பை வெல்லும் என்று ரசிகர்களுக்கு சத்தியம் செய்த நிலையில் ஜெய்ஷாவின் சத்தியத்தை இந்திய அணி காப்பாத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, June 4, 2024, 20:43 [IST]
Other articles published on Jun 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+