Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 உலகக்கோப்பை.. 20 அணிகள், 29 நாட்கள்.. எப்போது, எங்கே? முழு அட்டவணை விவரம் இதோ!

மும்பை: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஜூன் 1 முதல் ஜூன் 17 வரை நடக்கும் குரூப் போட்டிகளின் விவரங்களையும் பார்க்கலாம்.

நடப்பாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மொத்தமாக 29 நாட்கள் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில், முதல் 17 நாட்களில் குரூப் போட்டிகளாக நடக்கவுள்ளது. அதன்பின் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. அதேபோல் அரையிறுதி போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளிலும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது.

T20 World Cup 2024 : Full Schedule of ICC T20 World Cup group Matches date, time and ground details

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் விளையாடவுள்ளது. அதன்பின் ஜூன் 2ஆம் தேதி நடக்கும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பப்புவா நியூகினியா அணிகளும், நமீபியா - ஓமன் அணிகளும் மோதவுள்ளன. அதேபோல் ஜூன் 3ஆம் தேதி இலங்கை - தென்னாப்பிரிக்கா, ஜூன் 4ஆம் தேதி இங்கிலாந்தி - ஸ்காட்லாந்து அணிகளும், நெதர்லாந்து - நேபாளம் அணிகளும் மோதவுள்ளன.

தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி இந்தியா - அயர்லாந்து அணிகளும், பப்புவா நியூகினியா - உகாண்டா அணிகளும், ஆஸ்திரேலியா - ஓமன் அணிகளும் விளையாடவுள்ளன. அதன்பின் ஜூன் 6ஆம் தேதி நடக்கும் போட்டியில் அமெரிக்கா - பாகிஸ்தான், நமீபியா - ஸ்காட்லாந்து அணிகளும் மோதவுள்ளன. அதேபோல் ஜூன் 7ஆம் தேதி கனடா - அயர்லாந்து, நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான், இலங்கை - வங்கதேசம் அணிகள் விளையாடவுள்ளன. அதேபோல் ஜூன் 8ஆம் தேதி நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் விளையாடவுள்ளன.

தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான், ஓமன் - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடவுள்ளன. ஜூன் 10ஆம் தேதி தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளும், ஜூன் 11ஆம் தேதி பாகிஸ்தான் - கனடா, இலங்கை - நேபாளம், ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் விளையாடவுள்ளன. ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா - இந்தியா அணிகளும், வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. ஜூன் 13ஆம் தேதி இங்கிலாந்து - ஓமன், வங்கதேசம் - நெதர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் - பப்புவா நியூகினியா அணிகள் மோதவுள்ளன.

அதேபோல் ஜூன் 14ஆம் தேதி அமெரிக்கா - அயர்லாந்து அணிகளும், தென்னாப்பிரிக்கா - நேபாளம், நியூசிலாந்து - உகாண்டா அணிகளும் மோதவுள்ளன. ஜூன் 15ஆம் தேதி இந்தியா - கனடா அணிகளும், நமீபியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து, ஜூன் 16ஆம் தேதி பாகிஸ்தான் - அயர்லாந்து, வங்கதேசம் - நேபாளம், இலங்கை - நெதர்லாந்து அணிகளும் விளையாடவுள்ளன. தொடர்ந்து ஜூன் 17ஆம் தேதி நியூசிலாந்து - பப்புவா நியூகினியா அணிகளும், வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் விளையாடவுள்ளன.

Story first published: Friday, January 5, 2024, 20:46 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+