Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு கதம்.. கதம்.. புளோரிடா மாகாணத்தில் கடும் வெள்ளம்.. 3 போட்டிகள் ரத்தாக வாய்ப்பு

புளோரிடா : கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக டி20 உலக கோப்பையில் சில லீக் ஆட்டங்களை அமெரிக்காவில் மூன்று இடங்களில் ஐசிசி நடத்தியது. இதில் மைதானங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதது பெரிய பின்னடைவை கொடுத்தாலும் சிறிய இலக்கை எதிர்கொள்ள முடியாமல் பலம் வாய்ந்த அணிகள் திணறியது இந்த தொடரை சுவாரஸ்யமாக மாற்றியது.

அது மட்டுமல்லாமல் அமெரிக்க ஊடகங்களில் கிரிக்கெட் தொடர்பான வெளிச்சம் வெகுவாக கிடைத்தது. மேலும் நியூயார்க் புறநகரில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பெருமளவில் கூட்டம் வந்தது. அங்கு உள்ள உள்ளூர் வியாபாரமும் களைகட்டியது.

t20 world cup florida pakistan rain virat kohli rohit sharma indian national cricket team cricket 20 2024

இந்த நிலையில் தற்போது எஞ்சியிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்திருக்கிறது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களிலும் மூன்று முக்கிய போட்டிகள் நடக்கிறது.

இந்தியா கனடா, பாகிஸ்தான் அயர்லாந்து, அமெரிக்கா அயர்லாந்து ஆகிய மூன்று போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தில் மியாமி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் வரும் வியாழக்கிழமை வரை வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில் மியாமியின் புறநகர் பகுதியான லாடர்ஹில்லில் தான் தற்போது டி20 உலக கோப்பை ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. லாடர்ஹில் பகுதியிலும் வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் நிச்சயம் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலே தொடரை விட்டு வெளியேறிவிடும். வெள்ளிக்கிழமை அமெரிக்கா, அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானால் அமெரிக்காவுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். இதன் மூலம் 5 புள்ளிகள் பெற்று அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட அந்த அணியால் நான்கு புள்ளிகளை தான் பெற முடியும். எனினும் அந்த ஆட்டமும் மழையால் இரத்தாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Thursday, June 13, 2024, 13:47 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+