Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை - இந்திய அணிக்கு சார்பாக மாறிய விதி.. இனி ரசிகர்கள் கண் விழிக்க தேவையில்லை

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் முடிவடைந்த உடன் ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஜூன் இரண்டாம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நினைத்த நேரத்திற்கு மழை பெய்யும் என்பதால் போட்டி தடை விடக்கூடாது என்பதற்காக ஐசிசி சில மாற்றங்களை செய்திருக்கிறது.

T20 World cup 2024- ICC changes Playing condition to accommodate india cricket team ad their fans

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றால் இரண்டாவது அரையிறுதி தான் விளையாடும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. முதல் அரை இறுதி இந்திய நேரப்படி ஜூன் 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும், இரண்டாவது அரை இறுதி போட்டி ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

இதனால் இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இரண்டாவது அரையிறுதியில் தான் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று முதல் அரை இறுதி என்பது மழையால் போட்டி பாதிக்கப்பட்டால்,ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தியா விளையாடப் போகும் அரையிறுதிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்படவில்லை.

மாற்றாக அதே நாளில் போட்டியை நடத்தி முடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடுதலாக நான்கு மணி நேரம் வரை அதிகரித்து போட்டியை நடத்தி முடிக்கலாம் என்று ஐசிசி குறிப்பிட்டு இருக்கிறது. இறுதிப்போட்டி 29ஆம் தேதி நடைபெறுவதால் போட்டியை 28ஆம் தேதி ரிசர்வ் டே வைத்தால் வீரர்களுக்கு ஓய்வு இருக்காது.

இதனால் ரிசர்வ் டேவை இரண்டாவதாக இறுதியில் இருந்து நீக்கிவிட்டு அதே நாளில் போட்டியில் நடத்தி முடிப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மழை பெய்தாலும் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் வரை போட்டி நடத்த ஐசிசிக்கு தற்போது நேரம் இருக்கிறது. ஆனால் அந்த தருணத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் யார் முன்னிலையில் இருக்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Story first published: Tuesday, May 14, 2024, 17:48 [IST]
Other articles published on May 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+