Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

11 பேரும் சரியா விளையாடனும் என்று எதிர்பார்க்காதீங்க.. ரசிகர்களிடம் உருட்டிய இந்திய பயிற்சியாளர்

நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அணியில் இருக்கும் 11 வீரர்களும் சரியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அந்நியன் திரைப்படத்தில் சுஜாதா எழுதிய வசனமும் இதை தான் சொல்லும். இந்திய அணியில் இருக்கும் 11 பேரில் ஒருவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது என்று அந்நியன் ரசிகர்களை நோக்கி கேள்வி கேட்பார்.

t20 world cup Paras Mhambrey jadeja virat kohli rohit sharma indian national cricket team cricket 20 2024

ஊர் கூட்டி இழுத்தால் தானே தேர் நகரும். 11 பேரும் சரியாக விளையாடினால் தானே வெற்றி பெற முடியும். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ரசிகர்களும் ஒரு புது உருட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிஎஸ்கே வீரர்கள் இருவருமே சரியாக செயல்படவில்லை.

ஜடேஜா அயர்லாந்து அணிக்கு எதிராக விக்கெட் எடுக்கவில்லை. மேலும் பேட்டிங்கிலும் தடுமாறி வருகிறார். சிவம் துபே சொல்லவே தேவையில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஜடேஜாவை ஓரம் கட்ட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மாம்பரே ஜடேஜா இந்திய அணியின் முக்கியமான வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இது ஒரு அணி விளையாட்டாகும். ஒரு அணியாக 11 பேரும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். இந்த சூழ்நிலையில் 11 பேரும் சரியாக விளையாட வேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? ஏதேனும் ஒரு வீரர் ஒரு போட்டியில் நன்றாக விளையாடி அணியை காப்பாற்றுவார்.

என்னை பொறுத்தவரை ஜடேஜா நல்ல மனநிலையில் தான் இருக்கின்றார். டிராவிட்டும் பேட்டிங் பயிற்சியாளர் விக்கி ராத்தோரும் ஜடேஜாவை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இது நீண்ட தொடராகும். ஜடேஜா போன்ற அனுபவம் நிறைந்த வீரர்கள் நிச்சயமாக பார்முக்கு திரும்புவார்கள். அதற்கு அவர்களுக்கு ஓரிரு போட்டிகள் தான் தேவைப்படும்.

ஜடஜாவிடம் எவ்வளவு திறமை இருக்கிறது. எவ்வளவு அனுபவம் இருக்கிறது என்று அனைவருக்குமே தெரியும். நிச்சயமாக அவர் அணியில் தொடருவார். இந்திய அணிக்காக பல வெற்றியை பெற்று தருவார். உங்கள் அணியில் இருக்கும் வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து வாய்ப்பு தருவது என்பது மிகவும் முக்கியம் என்று மாம்ப்ரே கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 12, 2024, 15:12 [IST]
Other articles published on Jun 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+