நியூயார்க் : டி20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டிருக்கிறது. லீக் சுற்றுகள் தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.
இன்னும் நான்கு இடங்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் 8 சுற்றில் எளிதான 2 அணிகள் உடன் மோத வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். டி 20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றிலிருந்து போட்டிகள் மிகவும் கடுமையாக மாறிவிடும். ஏனென்றால் பலம் வாய்ந்த அணிகளை ஒவ்வொரு அணியும் சந்திக்க நேரிடும். ஆனால் நடப்பு டி20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்று இந்தியாவுக்கு மிகவும் எளிமையான ஆக மாறி இருக்கிறது.
இதற்கு காரணம் மற்ற குரூப்பில் பலம் வாய்ந்த அணிகள் தடுமாறி வருவதால், பலம் குன்றிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு தற்போது எளிதான அணிகள் கிடைத்திருக்கிறது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
இந்த இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கு மிகவும் எளிமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேலை ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வந்தால் இந்தியாவுக்கு கொஞ்சம் தலைவலி ஏற்படலாம். ஆனால் ஆப்கானிஸ்தான் வரவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சூப்பர் 8 சுற்றில் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு எளிதாக சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.