Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்! டி20 உலக கோப்பையில் தேர்வு-2 விக்கெட் கீப்பரும் விளையாடலாம்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் உலகக்கோப்பை t20 தொடர் வரும் ஜூன் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

T20 World cup 2024 India sqauad announced - Rishabh pant returns

பொதுவாக ஒரு விக்கெட் கீப்பரும் ஒரு ரிசர்வ் விக்கெட் கீப்பராக வரும் 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் இதில் முதன்மையான விக்கெட் கீப்பர் யார்? இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் அதன் பிறகு நடைபெற்ற எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் திரும்பிய ரிஷப் பண்ட், தன்னுடைய திறமையை நிரூபித்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று இரண்டாவது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர்களில் அதிக ரன்கள் அடித்திருக்கிறார். இந்த சூழலில் இரண்டு விக்கெட் கீப்பர்களுமே இருப்பது போல் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ரிஷப் பண்ட் ஐந்தாவது வீரராகவும் சஞ்து சாம்சன் ஆறாவது வீரராகவும் விளையாடும் வகையில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணியின் நடுவரிசை பலம் அதிகரித்திருக்கிறது. நான்காவது வீரராக சூரியகுமார் யாதவும் ஐந்தாவது வீரராக ரிஷப் பண்ட் ஆறாவது வீரராக சஞ்சு சாம்சன் ஏழாவது வீரராக ஹர்திக் பாண்டியா அல்லது சிவம் துபே விளையாட கூடும். இந்த நிலையில் கே எல் ராகுல் டி20 உலக கோப்பையில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 30, 2024, 16:17 [IST]
Other articles published on Apr 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+