மும்பை : டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி கடைசியாக 2007 ஆம் ஆண்டு தான் டி20 உலக கோப்பையை வென்றது.
அதன் பிறகு ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 உலக கோப்பையை வெல்வதற்கான ஒரு வாய்ப்பு தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அகார்கர் தலைமையிலான தேர்வு குழு சிறப்பான ஒரு அணியை தற்போது தேர்வு செய்து இருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு இடத்திற்கும் பலமான வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடக்க வீரராக கடந்த உலக கோப்பைகளில் எல்லாம் ரோகித் சர்மாவும், கே எல் ராகுலும் தான் இருந்தார்கள்.
ஆனால் கே எல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் போதுமானதாக இல்லை. இதனால் இனம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்குகிறார். ஆடுகளம் தோய்வாக இருந்தால் ஆங்கர் ரோல் செய்வதற்கு விராட் கோலியை விட சிறந்த நபர் வேறு யாரும் இல்லை.
நடு வரிசை தான் அதிபயங்கரமாக இந்திய அணிக்கு செட்டாகி இருக்கிறது. நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ், ஐந்தாவது வீரராக ரிஷப் பண்ட், ஆறாவது வீரராக சஞ்சு சாம்சன், ஏழாவது வீரராக ஹர்திக் பாண்டியா அல்லது சிவம் துபே போன்ற படு பயங்கரமான பேட்டிங்கை தேர்வு குழு தேர்வு செய்திருக்கிறது. இதில் ஜடேஜா அல்லது அக்சருக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு சிவம் துபேவையும் ஹர்திக் பாண்டியாவையும் வைத்து கொள்ளலாம்.
ஜடேஜா அல்லது அக்சர் பட்டேலுக்கு ஏழாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்கலாம். குல்தீப் அல்லது சாகல் 8ஆவது வீரராகவும், அர்ஸ்தீப் சிங் 9வது வீரராகவும், பும்ரா 10, சிராஜ் 11வது வீரராகவும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அதிரடியாக அமைந்திருக்கிறது. இப்படி முதல் 8 வீரருக்கும் மாற்று வீரர் இருப்பது போல் அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோன்று கூடுதல் வீரராக கில், கலீல் அகமது, ரிங்கு சிங் ஆவிஸ்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
பிளேயிங் லெவன் - 1. ரோகித் சர்மா, 2, ஜெய்ஸ்வால், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட்/ சஞ்சு சாம்சன், 6. ஹர்திக் பாண்டியா/சிவம் துபே, 7. ஜடேஜா/அக்சர் பட்டேல், 8, சாஹல்/குல்தீப் ,9 ஆர்ஸ்தீப் சிங், 10, முகமது சிராஜ், 11, பும்ரா