Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு

மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சந்தித்து பேசி உள்ளனர். அதில் முக்கிய முடிவாக துவக்க வீரர் ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்கி விட்டு விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஜெய்ஸ்வாலை மாற்று துவக்க வீரராகக் கூட அணியில் தேர்வு செய்யப் போவதில்லை. அவருக்கு பதிலாக மாற்று துவக்க வீரராக சுப்மன் கில்லை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தகவல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

T20 World Cup 2024 Indian opener Yashasvi Jaiswal might be dropped to include Virat Kohli

2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் தோல்வி அடைந்து வெளியேறிய போது இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்களை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அணித் தேர்வு கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் பங்கேற்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறப் போகும் வீரர்கள் யார், யார் என்ற விவாதம் நடந்துள்ளது. இதில் குறிப்பாக ஹர்திக் பாண்டியா குறித்து நீண்ட விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அதிக ஓவர்கள் பந்து வீச வேண்டும், அதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதை அடுத்து விராட் கோலியை டி20 அணியில் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் விராட் கோலி இந்திய டி20 அணியில் மூன்றாவது வரிசையில் தான் இறங்கி வந்தார். ஆனால், இந்த முறை அவரை துவக்க வீரராக, ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் துவக்க வீரராகவே விராட் கோலி ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்கினால் மற்றொரு துவக்க வீரரை அணியில் இருந்து நீக்க வேண்டும். அந்த அடிப்படையில் ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் துவக்க வீரர்களாக வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் ஜோடியாக இடம் பெற வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த திட்டத்தை தூக்கி வீசி விட்டு விராட் கோலிக்காக இடது கை துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார்.

Story first published: Wednesday, April 17, 2024, 13:05 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+