டி20 உலககோப்பை 2024 - ஒவ்வொரு அணியிலும் வயதான வீரர்கள் யார் தெரியுமா? இந்திய அணியில் இவர் தான்
மும்பை : டி20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கத்துக்குட்டி அணிகளும் சிங்கம் போல் பாய்ந்து பெரிய அணிகளை வேட்டை ஆடுகிறது. இதன் மூலம் இந்த தொடர் மீதான சுவாரஸ்யம் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் டி20 போட்டிகள் என்றாலே அது இளைஞர்களுக்கான விளையாட்டு என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அதனை உடைக்கும் வகையில் பல மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் யார் மூத்த வீரர் இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை மூத்த வீரர் என்றால் அது டேவிட் மில்லர் தான். டேவிட் மில்லருக்கு தற்போது 34 வயது 325 நாட்கள் ஆகிறது. நியூசிலாந்தின் பொறுத்தவரை மூத்த வீரராக டிம் சவுதி இருக்கிறார். இவர் 35 வயதில் 140 நாட்களை கடந்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இமாத் வசீம் இருக்கிறார். இவருக்கு 35 வயது 158 நாட்கள் ஆகிறது. இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூத்தவீரராக ஆண்ட்ரூ ரசூல் இருக்கிறார். இவருக்கு 36 வயது 4 நாட்கள் ஆகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை அதிரடி வீரர் டேவிட் வார்னர் மூத்த வீரராக இருக்கிறார். டேவிட் வார்னருக்கு தற்போது 37 வயது 219 நாட்கள் ஆகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை சிஎஸ்கே வீரர் மோயின் அலி இருக்கிறார். மோயின் அலிக்கு வயது 36 ஆண்டுகள் மற்றும் 317 நாட்கள் ஆகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரராக ஆஞ்சிலோ மேத்யூஸ் இருக்கிறார். இவருடைய வயது 36 ஆண்டுகள் மற்றும் 342 நாட்கள் ஆகிறது. வங்கதேச அணியை பொறுத்தவரை மகமதுல்லா மூத்த வீரராக இருக்கிறார். அவருக்கு 38 வயது 100 நாட்கள் ஆகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை மூத்த வீரராக ரோகித் சர்மா இருக்கிறார். ரோகித் சர்மாவின் வயது 37 ஆண்டுகள் 34 நாட்கள் ஆகிறது. ரோகித் சர்மா இதுவரை விளையாடிய அனைத்து டி20 உலக கோப்பையிலும் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரிலே ஸ்டார் அணிகளில் வயதான வீரர் என்றால் அது ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி தான். இவருக்கு தற்போது 39 வயது 121 நாட்கள் ஆகிறது.


Click it and Unblock the Notifications