Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக டக் அவுட்டான வீரர்கள் பட்டியல்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் எப்படி இருக்குமோ என சந்தேகம் அடைந்த ரசிகர்களுக்கு ஆரம்ப சில போட்டிகளை பிளாக்பஸ்டர் ஆக அமைந்திருக்கிறது.

இதன் மூலம் இந்த தொடர் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் அதிக விக்கெட் எடுத்தவர்கள் யார் என்பதை எல்லாம் நாம் பார்த்தோம்.

t20 world cup indian national cricket team rohit sharma virat kohli cricket 20 2024

அந்த வகையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக டக்அவுட் ஆன வீரர் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்கரா இருக்கிறார். இவர் டி20 உலக கோப்பையில் மூன்று இன்னிங்ஸ் விளையாடி மூன்றிலுமே டக் அவுட் ஆகி இருக்கிறார்.

இதேபோன்று இங்கிலாந்து அணியின் லுக் ரைட் 20 இன்னிங்ஸ் விளையாடி நான்குமுறை டக் அவுட்டாகி இருக்கிறார்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரூ ரஸில் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். இவர் 19 இன்னிங்ஸ் விளையாடி நான்கு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இலங்கை அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா இருக்கிறார்.

இவர் 18 இன்னிங்ஸ் விளையாடி நான்கு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்மன்ஸ் இருக்கிறார். இவர் 14 இன்னிங்ஸ் விளையாடி நான்குமுறை டக் அவுட்டாகி இருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரரும் தற்போதைய நெதர்லாந்து வீரருமான வேண்டர் மேர்வ் இருக்கிறார்.

இவர் 13 இன்னிங்ஸில் விளையாடி நான்குமுறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஸ்காட்லாந்து வீரர் காலம் மேக்லியோட் இருக்கிறார். இவர் 11 இன்னிங்ஸில் நான்கு முறை டி20 உலக கோப்பையில் டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் அயர்லாந்து வீரர் இருக்கிறார். இவர் எட்டு இன்னிங்ஸ் விளையாடி நான்கு முறை டக் அவுட்டாகி இருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் தில்சான் இருக்கிறார். இவர் 34 இன்னிங்ஸ் விளையாடி ஐந்து முறை டி20 உலக கோப்பையில் டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த பட்டியலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் ஜாம்பவான் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி இருக்கிறார். இவர் 32 இன்னிங்ஸ் விளையாடி ஐந்து முறை டி20 உலக கோப்பையில் டக் அவுட் ஆகி இருக்கிறார்.

Story first published: Tuesday, June 4, 2024, 6:34 [IST]
Other articles published on Jun 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+