Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை.. 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிப்பு.. 4வது முறையாக வழிநடத்தும் ஜாம்பவான்

சென்னை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக மீண்டும் கேன் வில்லியம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்கவுள்ளது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

T20 World Cup 2024 New Zealand announced 15 member squad for the T20 WC 2024 at America and West Indies

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள 20 அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து, ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு வழக்கம் போல் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் டெவான் கான்வே காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதேபோல் டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

T20 World Cup 2024 New Zealand announced 15 member squad for the T20 WC 2024 at America and West Indies

அதேபோல் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலமாக 4வது முறையாக டி20 உலகக்கோப்பையில் கேன் வில்லியன்சன் நியூசிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார். இதற்கு முன் அவரது தலைமையில் நியூசிலாந்து அணி 2016ஆம் ஆண்டு அரையிறுதி சுற்றுக்கும், 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிச்சுற்றுக்கும், 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணி அறிவிப்பை வித்தியாசமான முறையில் குழந்தைகள் மீடியாவை சந்தித்து அறிவிப்பதை போல் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Story first published: Monday, April 29, 2024, 8:51 [IST]
Other articles published on Apr 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+