Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீட்ல வேற பெரியவங்க இருந்தா வர சொல்லு.. இன்சாமம் புகாருக்கு ரோகித் செம பதிலடி.. இது தேவையா?

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறி இருப்பது அந்த அணியின் ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் எரிச்சல் அடைய செய்திருக்கிறது. அதே வேளையில் ஆசிய கண்டத்தில் இந்திய அணி மற்றும் தொடர்ந்து வெற்றியை பெற்று வருவதும் அவர்களுக்கு புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு அந்த அணி பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்து போட்டியில் வெற்றி பெறுவதாக குற்றச்சாட்டி இருக்கிறார். இந்த நிலையில் இன்சாமம் உல்ஹக்கின் இந்த புகார் குறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

t20 world cup ind vs eng rohit sharma

இன்சாமம்மின் இந்த புகாரை குறித்து கேட்டதும் ரோகித் சர்மா கடுப்பானார். இது குறித்து பதில் அளித்த அவர், வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வெயில் சுட்டெரித்தது அது மட்டுமில்லாமல் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்தது. இது போன்ற சூழ்நிலையில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகாமல் வேறு எங்கு தான் ஆகும்.

நாங்கள் என்ன இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் விளையாடுகின்றோம்?. இது எகுறித்து இன்சாம் உல் ஹக்கிற்கு தெரியாதா? என்று ரோகித் சர்மா பதிலடி கொடுத்தார். ஆடுகளம் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ற வகையில் இருப்பதால்தான் தங்களால் அந்த கலையை சிறப்பாக பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க முடிகிறது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஆஸ்திரேலிய அணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு ஆஸ்திரேலியா என்று தனி யாக ஒரு அணி இந்த தொடரில் இல்லை. இதற்காக நான் ஆஸ்திரேலியா அணியை குறை கூறவில்லை. அவர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி பல்வேறு கோப்பைகளை வென்று இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு இருப்பதன் மூலம் எங்களுக்கு தனி நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று ரோகித் சர்மா கூறினார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி என்று தனி ஒரு அணி கிடையாது என்று ரோகித் சர்மா கூறியதற்கு ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் சிரித்து விட்டார்கள். இதனால், தாம் எதோ தவறாக சொல்லிவிட்டோமோ என்று நினைத்து ஆஸ்திரேலியாவை புகழ்ந்து ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது. தாம் எதோ தவறாக சொல்லிவிட்டோமோ என்று நினைத்து ஆஸ்திரேலியாவை புகழ்ந்து ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 26, 2024, 22:29 [IST]
Other articles published on Jun 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+