Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையை வெல்ல இது தான் என் திட்டம்! இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து

நியூயார்க் : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி களம் இறங்கி இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் முகாமிட்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்திலும் வரும் ஒன்றாம் தேதி விளையாடுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் உள்ள ரோகித் சர்மா பிரத்தியேக திட்டத்தை வகுத்து வருவதாக கூறியுள்ளார்.

t20 world cup virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team 20

இது குறித்து அவர் பேசியதை தற்போது பார்க்கலாம். கேப்டனாக எனக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே பலவிதமான வீரர்களை எப்படி கையாள்வது என்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மன ஓட்டம் இருக்கும். ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு விஷயத்தை எதிர்பார்ப்பார்கள். அதனை அவர்களிடமிருந்து கேட்டு அதற்கு ஏற்ப நான் செயல்பட வேண்டும்.

மேலும் அனைத்து வீரர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே விதமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த அணியில் நாமும் ஒரு அங்கம் என்ற உணர்வு ஒவ்வொரு வீரருக்கும் வரும். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஏதேனும் பிரச்சனை வரும். அதனை நான் கவனமாக கேட்டு அதற்கு சரியான தீர்வை வழங்க வேண்டும்.

மேலும் ஒரு கேப்டனாக நான் தயாராகுவது போல் ஒரு வீரராகவும் நான் தயாராக வேண்டும். நான் ஒவ்வொரு அணியின் புள்ளி விவரங்கள் எவ்வாறு இருக்கும். இந்த வீரருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்ற நுணுக்கங்களை வகுப்பதில் கவனம் செலுத்துவேன். இதற்காக அணியின் ஆலோசனை கூட்டத்தில் நான் அதிக நேரம் செலவிட்டு திட்டங்களை வகுப்பேன்.

எந்த சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விடை எனக்கு தெரிந்திருக்க வேண்டும். டி20 கிரிக்கெட் மாறி வருகிறது. இதனால் ஒவ்வொரு மைதானம் எப்படி இருக்கும். எதிரணியினர் எப்படி செயல்படுவார்கள் என்பதை எல்லாம் பற்றி நாம் தெரிந்து இருக்க வேண்டும். இதைப் பற்றி எல்லாம் நான் அறிந்து கொண்டு நான் வீரர்களிடம் எடுத்துரைப்பேன். மைதானங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வகுத்து வருவதாகவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 30, 2024, 9:17 [IST]
Other articles published on May 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+