Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிவம் துபேவை பாதுகாத்து காப்பாற்றிய தோனி.. தொக்காக ரோகித்திடம் மாட்டி கொண்ட கதை.. சாட்டை சுழற்றுமா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த வீரர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வலியுறுத்திய பெயர் சிவம் துபே. காரணம் யுவராஜ் சிங் போல் இடது கை பேட்ஸ்மனாக சிக்ஸர்களை அசால்ட் ஆக அடிக்கும் திறமையை கொண்டவர்.

சிவம் துபே வேகப்பந்து வீச்சையும் மெதுவாக வீசக்கூடிய திறமையை கொண்டு இருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு நடுவரிசையில் களமிறங்கிய சிவம் துபே ரன்கள் அதிகமாக உயர காரணமாக இருந்தார். குறிப்பாக சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிவம் துபே பட்டையை கிளப்பினார்.

t20 world cup ind vs pak hardik pandya rohit sharma virat kohli indian national cricket team cricket 20 2024

இதனால் டி20 உலக கோப்பையில் சிவம் துபே இடம்பெற்றால் இந்திய அணியில் நடுவரிசையில் இருக்கும் பிரச்சனை தீர்க்கப்படும் என்று இந்திய அணி நிர்வாகம் நம்பியது. இதனால் தான் சிவம் துபே பெயர் அணியில் சேர்க்கப்பட்டது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரின் சிவம் துபே பெரிய அளவில் பந்து வீசவில்லை. எனினும் அது குறித்து கவலைப்படாமல் நீங்கள் பேட்டிங் செய்தால் போதும்.

தேவைப்பட்டால் இரண்டு ஓவர்கள் வீசுங்கள் என்ற பாணியில் தான் சிவம் துபேவை இந்திய அணிக்கு ரோகித் சர்மா கொண்டு வந்தார். ஆனால் சிவம் துபேக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருப்பது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது தான் தெரியவந்தது. இது ரோகித் சர்மாவை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்திய அணி 11 ரன்கள் தான் அடித்து இருந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக ஆட முற்பட்டனர்.

அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அடித்த பந்தை கைக்கு வந்ததை சிவம் துபே கேட்ச் மிஸ் செய்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அப்போது தான் சிவம் துபே பில்டிங்கில் சொதப்புவார் என்று தெரிய வந்தது. இதன் காரணமாக தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிவம் துபே விளையாடும் போது அவரை வெறும் பேட்டிங்கிற்கு இம்பேக்ட் வீரராக அந்த அணி நிர்வாகம் பயன்படுத்தி இருக்கிறது.

சிவம் துபே பில்டிங்கில் சொதப்புவார் என்பதை தெரிந்து அதனை மறைக்கும் முயற்சியில் இம்பேக்ட் விதியை பயன்படுத்தி சிஎஸ்கே இந்த யுத்தியை கடைப்பிடித்து இருக்கின்றது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இம்பேக்ட் விதி இல்லை என்பதால் சிவம் துபே பிளேயிங் லெவனில் இருந்தால், நிச்சயம் பில்டிங் செய்து ஆக வேண்டும். இதனால் சிவம் துபே நேற்று சொதப்பியதன் காரணமாக அவருக்கு பந்துவீச்சில் ஓவர் ரோகித் சர்மா வழங்கவில்லை. இதன் காரணமாக அடுத்த போட்டியில் சிவம் துபே நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.

Story first published: Monday, June 10, 2024, 23:20 [IST]
Other articles published on Jun 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+