Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்பை வீணடித்து கொண்ட சிஎஸ்கே வீரர்.. டி20 உலக கோப்பையில் பறிப்போன இடம்.. என்ன நடந்தது?

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான பயணத்தை இந்திய அணி இன்று முதல் தொடங்குகிறது.விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு இதுதான் கடைசி டி20 உலக கோப்பை தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கோப்பையை வென்று டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் என்றால் அது சிஎஸ்கே வின் சிவம் துபே தான்.

T20 world cup virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team

சிஎஸ்கே அணி சிவம் துபேவை சிறப்பாக பயன்படுத்தி அவரின் முழு திறமையும் பயன்படுத்திக் கொண்டது. பேட்டிங்கில் களமிறங்கி சிவம் துபே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் சிவம் துபே தான் இந்திய டி20 அணியில் ஆல்ரவுண்டராக இடம் பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.மேலும் ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் தடுமாறியதால் சிவம் துபேக்கு 100% வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் டி20 உலக கோப்பை அணியில் சிவம் துபே பெயர் சேர்க்கப்பட்ட பிறகு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
தொடர்ந்து அதிரடி காட்டி வந்த சிவம் துபே, பேட்டிங்கில் கடுமையாக தடுமாற தொடங்கினார். இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்ட பிறகு 0,0,21, 18, 7 ஆகிய ரன்கள் தான் சிவம் துபே அடித்திருந்தார். இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பந்துவீச்சு பார்மை மீட்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

இதனால் இந்திய டி20 அணியில் சிவம் துபேவை விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.இதேபோன்று ஏற்கனவே ஜடேஜா ரிஷப் பன்ட் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் சிவம் துபே போன்ற கூடுதலாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுக்காது.

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த சூழலில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவும் விராட் கோலி மூன்றாவது வீரராகவும் களமிறங்கினால் ஹர்திக் பாண்டியா என ஒரு ஆல்ரவுண்டருக்கு மட்டும்தான் இடம் கிடைக்கும் என தெரிகிறது. இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய சிவம் துபே டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைத்தவுடன் தடுமாறியது அவருக்கு பெரும் பின்னளவை கொடுத்திருக்கிறது.

Story first published: Saturday, June 1, 2024, 18:54 [IST]
Other articles published on Jun 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+