Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை விமர்சித்ததால் கொலை மிரட்டல்.. நியூசிலாந்து வீரர் திடுக்கிடும் தகவல்

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரசிகர்கள் கொண்ட கிரிக்கெட் வீரர் என்றால் அது தற்போது விராட் கோலி தான். விராட் கோலி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் அவருக்காக ரசிகர்கள் எப்போதுமே துணை நிற்பார்கள்.

அந்த அளவுக்கு கோலி மீது ரசிகர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். விராட் கோலி மீது இருக்கும் வெறியால் அவர் மீது யாரேனும் ஏதேனும் குறை சொன்னால் அவர்களை கடுமையாக விமர்சித்து அவரது ரசிகர்கள் பிரச்சனை செய்வார்கள்.

T20 world cup simon doull virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team 20

இதற்கு முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் தூலும் விதிவிலக்கு இல்லை. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சைமன் தூல், விராட் கோலி மட்டுமல்லாமல் பல்வேறு வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்று பேசிய அவர் விராட் கோலி ஒரு மிக சிறந்த வீரர் என்று பாராட்டிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட்டில் மிகவும் வல்லவராக இருக்கிறார். தாம் ஆட்டம் இழந்து விடக்கூடாது என்று அவர் அதிகமாக கவலைப்படக்கூடிய வீரராக இருக்கின்றார். விராட் கோலி குறித்து நான் ஆயிரம் விஷயங்கள் பாராட்டிருக்கின்றேன். ஆனால் ஏதேனும் ஒரே ஒரு குறையோ இல்லை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆதங்கத்தில் பேசினால் எனக்கு கொலை மிரட்டலை அவர்களது ரசிகர்கள் தருகிறார்கள்.

நான் விராட் கோலியை தனிப்பட்ட முறையில் என்றுமே பேசியதில்லை. நாங்கள் இருவரும் நல்ல உரையாடல்களை நடத்தி இருக்கின்றோம். நான் பலமுறை அவரை நேர்காணல் செய்திருக்கின்றேன். நாங்கள் கிரிக்கெட் குறித்து பல விஷயங்கள் பேசி இருக்கிறோம். விராட் கோலி மட்டுமல்லாமல் பாபர் அசாம் குறித்தும் நான் இதை விமர்சனத்தை வைத்திருக்கிறேன்.

அப்போது பாபர் அசாமும் என்னுடைய பயிற்சியாளரும் இதை தான் சொன்னார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், சைமன் தூலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு தான் மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்,ரசிகர்கள் விமர்சனங்களை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Story first published: Thursday, May 30, 2024, 6:47 [IST]
Other articles published on May 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+