Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தான் பா சகோதரத்துவம்! மூன்று மத குருக்கள் ஆசி பெற்ற இலங்கை அணி.. டி20 உலககோப்பைக்கு புறப்பாடு

கொழும்பு : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் இரண்டாம் தேதி இந்திய நேரப்படி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணி வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரை விட்டு விலகி சென்று விட்டார்கள்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள்.

T20 World cup 2024- Srilanka cricket team departs for the USA with 3 Religious guru blessings

இலங்கை அணி குரூப் சுற்றில் டி பிரிவில் இருக்கிறது. இதில் வங்கதேசம், நேபால், நெதர்லாந்து தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் இலங்கை உள்ளது. இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் மூன்றாம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூயார்க் நகரில் விளையாடுகிறது. பொதுவாக இலங்கை புத்த மதத்தை பெரும் வாரியாக பின்பற்றும் நாடாக தான் அறியப்படும்.

ஆனால் அங்கு கிறிஸ்தவ மக்களும் இஸ்லாமிய மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மதசார்பின்மையும் உண்மையான சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் விதமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு நிகழ்வை நடத்தியது. அதில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் புறப்படுவதற்கு முன்பு புத்த மத குரு இஸ்லாமிய மத குரு மற்றும் கிறிஸ்தவ மத குரு மூன்று பேரும் தனியாக இலங்கை கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை அணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை மதக் கொள்கையில் இருந்த நிலையில் மிகப்பெரிய கலவரம் வெடித்து தற்போது மதம் முக்கியம் இல்லை மனிதம் தான் முக்கியம் என்று பின்பற்றி வருகிறது.

Story first published: Wednesday, May 15, 2024, 14:44 [IST]
Other articles published on May 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+