Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்காவில் படாத பாடு பட்ட இந்தியா.. சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளமாவது சாதகமா இருக்குமா?

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏ பிரிவிலிருந்து தகுதி பெற்றிருக்கிறது. இந்திய அணி லீக் சுற்றில் நியூயார்க் மைதானத்தில் மூன்று போட்டிகளில் விளையாடியது. இந்த மூன்று போட்டியில் இந்தியா படாத பாடுபட்டு தான் வெற்றி பெற்றது.

இதனை கேப்டன் ரோகித் சர்மாவே வாய்விட்டு கூறிவிட்டார். நியூயார்க் மைதானம் பேட்டிங்கிற்கு பாதகமாக இருந்ததால், எந்த அணியும் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த சூழலில் சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் தான் நடைபெறுகிறது.

t20 world cup 5 penalty runs super 8 virat kohli rohit sharma indian national cricket team cricket

இங்கு இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளும் எங்கு நடைபெறுகிறது. இதன் மைதானங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அல்லது வங்கதேசம் ஆகிய அணியை எதிர் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் இந்தியா பார்படாஸ், செயின்ட் லூசியா, செயின்ட் ஆன்டிகுவா போன்ற பகுதிகளில் விளையாடுகின்றது. இதில் பார்பிடாஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்த தொடரில் முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது.

இதனால் இந்த மைதானம் இந்தியாவின் பேட்டிங்கிற்கு நிச்சயம் சாதகமாக இருக்கும். ஆனால் இங்கு டாஸ் மிகப்பெரிய பங்கை வகிக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக முடிவுகள் வரும் என எதிர்பார்க்கலாம். இதே போன்று செயின்ட் லூசியாவில் நடைபெறும். போட்டியும் ஓரளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருக்கும்.

மேலும் இந்த ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சுக்கு ஒரு அளவுக்கு எடுபடும். இதன் காரணமாகத்தான் இந்திய அணி t20 உலக கோப்பையில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த மைதானமும் இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்டாக தான் அமையும். இதே போன்று செயின்ட் ஆன்டிகுவா மைதானம் கொஞ்சம் தோய்வாக இருந்தாலும், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அங்கும் சுழற் பந்து வீச்சு எடுபடும் என்பதால் இந்தியா இந்த மைதானங்களில் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, June 13, 2024, 6:40 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+