Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப திட்டாதீங்க பா! ரிங்கு சிங் அணியில் இல்லாததுக்கு காரணமே இது தான்... ஆஸி. ஜாம்பவான் கருத்து

மும்பை : டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு, பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பினிஷர் ரோலில் இந்திய அணி ஒரு புதிய வீரரை தேடிக்கொண்டிருந்த நிலையில் அதற்கு விடையாக இருந்தார். இந்த நிலையில் ரிங்கு சிங் இல்லாததற்கு என்ன காரணம் என்பது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

T20 World cup 2024- Tom moody reveals the Reason for Rinku sinku singh is not selected

இது குறித்து பேசிய அவர், ஒரு வீரர் பார்மில் இருக்கிறாரா? இல்லையா? என்பது காரணமாக எனக்குத் தோன்றவில்லை. சிவம் துபே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கிறார். மேலும் அவருக்கு பந்துவீச தெரியும். ஆனால் பந்து வீசு தெரியாது மட்டும் எப்படி பந்து வீசுவது என்று கற்றுக் கொண்டு தன்னுடைய பந்து வீசும் திறமையை வெளிப்படுத்தி இருந்தால் நிச்சயமாக அவர் அணியில் இருந்திருப்பார்.

சிவம் துபேக்கு பந்து வீசு தெரியும் என்பதால் மட்டுமே அவரை அணியில் தேர்வு செய்து இருக்கிறார்கள். வெறும் சிவம் துபேவை நாம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங்கில் களம் இருக்கலாம். மேலும் வேகப்பந்து வீச தெரிந்த ஒரு ஆல்ரவுண்டர் அணியில் இருந்தால் கூடுதலாக பிளேயிங் லெவனில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் கூட வைத்து விளையாட முடியும் என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அணியில் ஜடேஜா, சிவம் துபே, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் என கீழ் வரிசையில் மட்டும் நான்கு இடத்துக்கு பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஐந்தாவதாக ஒரு இடது கை பேட்ஸ்மேனுக்கு இடம் இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் வெறும் 82 பந்துகளை மட்டும் தான் எதிர் கொண்டு இருக்கிறார்.

இதனால் அவருடைய பார்ம் எப்படி இருக்கிறது என்றும் தெரியவில்லை. இந்த காரணங்களால் தான் ரிங்கு சிங் இருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் மே 25ஆம் தேதி வரை மாற்று வீரர்களை ஒவ்வொரு அணியும் மெயின் அணிக்கு கொண்டு செல்லலாம். இதனால் ரிங்கு சிங் நடப்பு ஐபிஎல் தொடரில் பிரமாதமாக ஏதேனும் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவருக்கும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Wednesday, May 1, 2024, 18:59 [IST]
Other articles published on May 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+