Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2024 - பல வீரர்களின் சாதனை உடைய போகிறது.. புதிய சாதனை படைக்க கோலிக்கு வாய்ப்பு

மும்பை : 2024 தான் ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றது. இந்த தொடரில் பல சாதனைகள் உடைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அது என்ன என்னவென்று தற்போது பார்க்கலாம். டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே அதிக பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை ஜெயவர்த்தனே படைத்திருக்கிறார். அவர் மொத்தமாக 11 பவுண்டரிகள் அடித்திருக்கிறார். தற்போது இரண்டாவது இடத்தில் விராட் கோலி 103 பவுண்டரிகளுடன் இருக்கிறார்.

T20 world cup kl rahul sanju samson virat kohli rohit sharma hardik pandya bcci india national cricket team 20

எனவே இந்த சாதனைகள் உடைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் இருக்கிறார். கெயில் 47 பந்துகளிலும், 50 பந்துகளும் அதிவேகமாக சதம் அடித்து முதல் இரண்டு இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இந்த ரெக்கார்டு இம்முறை உடைக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஏற்கனவே நடப்பாண்டில் நேபாளத்தை சேர்ந்த ஜான் நிக்கோல் என்ற வீரர் 33 பந்துகளின் அதிவேக சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை கத்துக்குட்டி அணிகள் பல விளையாடுவதால் இந்த ரெக்கார்ட் முறியடிக்கப்படும் வாய்ப்பு இருக்கின்றது .இதுபோன்று ஒரு தொடரில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் டிவில்லியர்ஸ் 23 கேட்ச்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் டேவிட் வார்னர் 21 கேட்ச்களுடனும், ரோஹித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 16 கேட்ச்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். இதனால் இந்த சீசனில் டிவில்லியர்ஸ் ரெக்கார்ட் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோன்று 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றால் ஒரே சமயத்தில் அனைத்து ஐசிசி தொடரையும் வென்ற அணி என்று பெருமையை ஆஸ்திரேலியா பிடிக்கும்.

ஆஸ்திரேலியா அணி 19 வயது உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை, மகளிர் டி20 உலக கோப்பை,மகளிர் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை, ஆடவர் உலகக் கோப்பை,ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்தையும் வென்று இருக்கும் நிலையில் டி20 உலக கோப்பை வென்றால் புதிய சாதனை ஆகும்.

தற்போது டி20 உலக கோப்பையில் 16 அணிகளுக்கு பதிலாக 20 அணிகள் பங்கேற்பதால் அதிகபட்சமாக ஒரு வீரர் ஒன்பது போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆறு போட்டியில் விராட் கோலி 319 ரன்கள் அடித்தது இதுவரை ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்ததற்கான சாதனையாக இருக்கிறது. இது தற்போது முறியடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Wednesday, May 29, 2024, 9:33 [IST]
Other articles published on May 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+