Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி தான் முக்கியம் போல.. டி20 உலககோப்பை இந்திய அணியுடன் போகாத விராட் கோலி.. கடுப்பான பிசிசிஐ

மும்பை : ஐசிசி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு டி20 உலக கோப்பையையும் வெல்லவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த டி20 உலக கோப்பை கூட அரையிறுதி வரை சென்ற இந்திய அணி இங்கிலாந்துடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

T20 World cup 2024- Virat kohli is not seen in the first batch of indian team to visit US

இந்த நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களுக்கு வயதாகி வருவதால் இதுவே அவர்கள் பங்கேற்கும் கடைசி டி20உலக கோப்பை தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இந்திய அணி வீரர்களால் ஒருங்கிணைந்து பயிற்சி செய்ய முடியவில்லை.

T20 World cup 2024- Virat kohli is not seen in the first batch of indian team to visit US

மேலும் ஐபிஎல் போட்டிகள் மே 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால், இந்திய அணி வீரர்கள் தாமதமாக தான் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சொல்கிறார்கள். இந்த சூழலில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்கள்.ரோகித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா சிவம் துபே, முகமது சிராஜ், சூர்யகுமார், குல்தீப் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.

T20 World cup 2024- Virat kohli is not seen in the first batch of indian team to visit US

கடந்த புதன்கிழமை எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி ராஜஸ்தான் இடம் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்காக பங்கேற்ற முகமது சிராஜ் கூட தற்போது எந்த ஒரு ஓய்வும் இன்றி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

ஆனால், விராட் கோலி மட்டும் புறப்படாமல் மும்பையில் தங்கிவிட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐபிஎல் தொடரை விட இந்திய அணிக்கான டி20 உலககோப்பை தான் மிகவும் முக்கியம் என்றும் ஆனால் விராட் கோலி ஏன் அமெரிக்காவுக்கு விரைவாக சென்று பயிற்சி செய்யாமல் இருக்கிறார் என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

T20 World cup 2024- Virat kohli is not seen in the first batch of indian team to visit US

ஆர் சி பி கோப்பை வெல்லாமல் தொடரை விட்டு சென்ற நிலையில், விராட் கோலி மனதை இது மிகவும் பாதித்திருப்பதால் அவர் அதிலிருந்து இன்னும் மீளவில்லையா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி இரண்டு பிரிவுகளாக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், இதில் முதல் பிரிவில் உள்ள வீரர்கள் தான் தற்போது சென்றிருப்பதாகவும், இரண்டாவது பிரிவு வரும் 28ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்படும் என்றும் பி சி சி ஐ விளக்கமளித்துள்ளது.

Story first published: Sunday, May 26, 2024, 7:34 [IST]
Other articles published on May 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+