Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை பயிற்சி ஆட்டம்.. வார்னர் அபார ஆட்டம்.. செம பார்மில் இருக்கும் ஆஸ்திரேலியா

போர்ட் ஆப் ஸ்பெயின் : டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி தற்போது நமிபியாவை போர்ட் ஆஃப் ஸ்பைன் நகரில் எதிர்கொண்டது.

இதில் ஆஸ்திரேலிய அணி நமீபியாவை சுக்கு நூறாக உடைத்து அசத்தியிருக்கிறது. உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று தொடங்கியுள்ள நிலையில் ஆஸ்திரிலிய அணி நமீபியாவை எதிர்கொண்டது.

T20 World cup 2024 Warm up match - David warner shines as australia demolishes Namibia

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறிங்கிய நமிபியா அணியின் சேன் கிரீன் என்ற வீரர் மட்டும் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 நபர்கள் எடுத்தது. அதிகபட்சமாக அடம் சாம்பா 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹேசல் வுட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இதில் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக அந்த அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், நமீபியாவின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார். 21 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 54 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கும்.

இதில் ஸ்ட்ரைக் ரேட் 257 என்ற அளவில் இருக்கின்றது. மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஸ் 18 ரன்கள் சேர்க்க ஜாஸ் இங்கிலீஷ் 5 ரன்களில் வெளியேறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார் டீம் டேவிட் இந்த ஆட்டத்தில் 16 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

இதேபோன்று மேத்தீவ் வேட் ஐந்து பந்துகளில் 12 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் எல்லாம் 123 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் நடப்பு டி20 உலக கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக போகிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Wednesday, May 29, 2024, 11:18 [IST]
Other articles published on May 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+