Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு 25 கோடி.. பாகிஸ்தானுக்கு 4.9 கோடிதான்.. 20 அணிகளுக்கும் ஐசிசி பரிசுத்தொகை எவ்வளவு?

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாபெரும் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக ஐசிசி மொத்தம் 11.25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை ஒதுக்கியிருந்தது. இதில் பங்கேற்ற 20 அணிகளுக்கும் அவர்களின் தரவரிசை மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் பரிசுத்தொகை பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பரிசு தொகை

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி, இந்தத் தொடரின் வெற்றியாளராகக் கிரீடம் சூடியது. இதற்காக இந்திய அணிக்கு அதிகபட்சமாக 2.64 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 25 கோடி ரூபாய்) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையில் இதுவே மிக அதிகப் பங்காகும்.

T20 World Cup 2026 ICC Allocates 11 25 Million Prize India Secure Rs 25 Crore Pakistan gets 4 9 crores

இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணிக்கு 1.42 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 13 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் கணிசமான தொகை கிடைத்துள்ளது.

20 அணிகளுக்கும் கிடைத்த பரிசுத்தொகை முழு விவரம்

இந்த முறை ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்ற அனைத்து 20 அணிகளுக்கும், அவை தொடரில் எந்த நிலை வரை முன்னேறின என்பதைப் பொறுத்துப் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது. அதன் முழு விவரம் இதோ:

  • இந்தியா - 2,639,423 டாலர் (சுமார் ரூ. 25 கோடி)
  • நியூசிலாந்து - 1,422,692 டாலர் (சுமார் ரூ. 13 கோடி)
  • தென்னாப்பிரிக்கா - 1,005,577 டாலர் (சுமார் ரூ. 9.24 கோடி)
  • இங்கிலாந்து - 974,423 டாலர் (சுமார் ரூ. 8.96 கோடி)
  • வெஸ்ட் இண்டீஸ் - 538,269 டாலர் (சுமார் ரூ. 5 கோடி)
  • பாகிஸ்தான் - 522,692 டாலர் (சுமார் ரூ. 4.9 கோடி)
  • ஜிம்பாப்வே - 491,538 டாலர் (சுமார் ரூ. 4.6 கோடி)
  • இலங்கை - 475,962 டாலர் (சுமார் ரூ. 4.4 கோடி)
  • ஆப்கானிஸ்தான் - 309,808 டாலர் (சுமார் ரூ. 3.1 கோடி)
  • ஆஸ்திரேலியா - 309,808 டாலர் (சுமார் ரூ. 3.1 கோடி)
  • அமெரிக்கா - 309,808 டாலர் (சுமார் ரூ. 3.1 கோடி)
  • ஸ்காட்லாந்து - 278,654 டாலர் (சுமார் ரூ. 2.8 கோடி)
  • அயர்லாந்து - 271,731 டாலர் (சுமார் ரூ. 2.7 கோடி)
  • இத்தாலி - 256,154 டாலர் (சுமார் ரூ. 2.5 கோடி)
  • நெதர்லாந்து - 256,154 டாலர் (சுமார் ரூ. 2.5 கோடி)
  • ஐக்கிய அரபு அமீரகம் - 256,154 டாலர் (சுமார் ரூ. 2.5 கோடி)
  • நேபாளம் - 256,154 டாலர் (சுமார் ரூ. 2.5 கோடி)
  • கனடா - 225,000 டாலர் (சுமார் ரூ. 2 கோடி)
  • நமிபியா - 225,000 டாலர் (சுமார் ரூ. 2 கோடி)
  • ஓமன் - 225,000 டாலர் (சுமார் ரூ. 2 கோடி)

IPL 2026: முதல்ல கேஸ்.. அடுத்து பெட்ரோல், டீசல்.. இதற்கு நடுவில் ஐபிஎல் நடத்துவோம்.. பிசிசிஐ முடிவு

அனைத்து அணிகளுக்கும் ஊக்கத்தொகை

இந்தத் தொடரில் பங்கேற்று லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கும் குறைந்தபட்சமாகத் தலா 2.25 லட்சம் டாலர்கள் (சுமார் 2 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வீரர்களின் நிதி ஊக்கத்தை மேம்படுத்தவும் ஐசிசி இந்தத் தொகையை வழங்கியுள்ளது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதோடு மட்டுமல்லாமல், பெரிய அளவிலான பரிசுத்தொகையையும் வென்று தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.

Story first published: Thursday, March 12, 2026, 8:12 [IST]
Other articles published on Mar 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+