Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 World Cup 2026: துவம்சம் செஞ்ச அயர்லாந்து.. லோர்கன் டக்கர் சரமாரி அதிரடி.. ஓமன் படுதோல்வி

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஓமன் அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அணி இமால வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு சின்ஹாலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஓமன் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு எவ்வளவு தவறானது என்பதை அயர்லாந்து வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தின் மூலம் உணர்த்தினர்.

T20 World Cup 2026 Ireland Crush Oman by 96 Runs Lorcan Tucker s 94 Powers Record Total

லோர்கன் டக்கர் ருத்ரதாண்டவம்

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. டிம் டெக்டர் 5 ரன்களிலும், ராஸ் அடேர் 14 ரன்களிலும், ஹாரி டெக்டர் 14 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணி சற்றுத் தடுமாறியது. ஆனால், நான்காவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் மற்றும் கேரத் டெலானி ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

குறிப்பாக லோர்கன் டக்கர் ஓமன் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை விளாசிய அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 94 ரன்களைக் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அவருக்குத் துணையாக ஆடிய கேரத் டெலானி 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.

கடைசி நேரக் கொண்டாட்டம்

இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய ஜார்ஜ் டாக்ரெல் வெறும் 9 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் விளாசி மிரட்டினார். இதனால் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் என்ற இமால ஸோகரை எட்டியது. ஓமன் தரப்பில் ஷகீல் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போராடிய ஓமன்

236 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணிக்குத் தொடக்கம் அதிரடியாக இருந்தாலும், விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. ஜட்டிந்தர் சிங் 7 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் அமீர் கலாம் மற்றும் ஹம்மத் மிர்சா ஜோடி அணியை மீட்கப் போராடியது.

சிறப்பாக விளையாடிய அமீர் கலாம் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஹம்மத் மிர்சா 37 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து ஓமன் அணி நல்ல நிலையில் இருந்தது.

திடீர் சரிவு

நன்கு செட் ஆன பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததும் ஓமன் அணி சீட்டுக்கட்டு போலச் சரிந்தது. ஜோஷ் லிட்டில் வீசிய அனல் பறக்கும் பந்துவீச்சில் ஓமன் அணியின் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 42 ரன்களுக்குள் ஓமன் அணி இழந்தது.

இறுதியில் 18 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஓமன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேத்யூ ஹம்ப்ரிஸ் மற்றும் பாரி மெக்கார்த்தி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி தனது ரன் ரேட்டை கணிசமாக உயர்த்திக் கொண்டுள்ளது.

Story first published: Saturday, February 14, 2026, 15:04 [IST]
Other articles published on Feb 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+