Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Italy vs SCO: இத்தாலி கேப்டனுக்கு நடந்த விபரீதம்.. முதல் போட்டியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்

கொல்கத்தா: கால்பந்து உலகக்கோப்பையில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி, கிரிக்கெட் உலகக்கோப்பையில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் போட்டியில் இன்று களமிறங்கியது. ஆனால், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிரான இந்தப் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இத்தாலி அணிக்கு ஒரு மோசமான சோகம் நிகழ்ந்தது. அந்த அணியின் கேப்டன் வெய்ன் காட்சன் படுகாயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

T20 World Cup 2026 Italy Captain Wayne Madsen Ruled Out of T20 World Cup 2026 Opener Shoulder Dislocation Injury

மைதானத்தில் நடந்த விபரீதம்

போட்டியின் நான்காவது ஓவரை இத்தாலி வீரர் தாமஸ் டிராகா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ஸ்காட்லாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சி, அதை லெக் சைடு திசையில் பலமாகத் தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி கோட்டை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

மிட்-ஆன் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இத்தாலி கேப்டன் வெய்ன் காட்சன், அந்தப் பந்தைத் தடுப்பதற்காக வேகமாக ஓடிச் சென்று பாய்ந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தனது இடது தோள்பட்டை பலமாகத் தரையில் இடிக்குமாறு விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் தனது கையைப் பிடித்துக்கொண்டு வலியால் மைதானத்தில் துடித்தார்.

தோள்பட்டை விலகியது

உடனடியாக மருத்துவக் குழுவினர் மைதானத்திற்கு விரைந்து சென்று அவரைப் பரிசோதித்தனர். வலி தாங்க முடியாமல் அவர் அவதிப்பட்டதால், உடனடியாக அவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்னர் இத்தாலி அணி நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, வெய்ன் காட்சனுக்கு இடது தோள்பட்டை எலும்பு விலகிவிட்டது எனத் தெரியவந்தது. இதன் காரணமாக அவர் இந்தப் போட்டியில் இனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை அறிமுக போட்டியிலேயே கேப்டன் படுகாயமடைந்தது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஸ்காட்லாந்து அதிரடி

கேப்டன் வெளியேறியதால் இத்தாலி அணியின் துணை கேப்டன் ஹாரி மனெண்டி அணியை வழிநடத்தினார். மறுபுறம் ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் இத்தாலி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாகத் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி 54 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களும், பிராண்டன் மெக்முல்லன் 18 பந்துகளில் 41 ரன்களும் குவித்தனர். மைக்கேல் லீஸ்க் வெறும் 5 பந்துகளில் 22 ரன்கள் குவித்து மிரட்டினார். அறிமுகப் போட்டியிலேயே கேப்டனை இழந்துத் தடுமாறிய இத்தாலி அணி, ஸ்காட்லாந்தின் அதிரடியால் மேலும் நிலைகுலைந்து போனது.

Story first published: Monday, February 9, 2026, 12:51 [IST]
Other articles published on Feb 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+