Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் சிறப்பாக விளையாடிய டாப் 5 வீரர்கள்.. ரிக்கி பாண்டிங் போட்ட மதிப்பெண் பட்டியல்

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ரிக்கி பாண்டிங், வெளியிட்டார். இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் முழுமையான 10 மதிப்பெண்களைப் பெற்றார். இந்தியாவின் சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 9.5 மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்கள் இடம்பிடித்தனர்.

சஞ்சு சாம்சன் தொடரின் இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 'தொடர் நாயகன்' விருதை வென்றார். அவர் இந்தியாவின் அதிகபட்ச ரன் எடுத்தவராகவும், போட்டியின் மூன்றாவது அதிக ரன் குவித்தவராகவும் இருந்தார். பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வீரர்கள் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தொடரின் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களில் ஒருவராகவும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

வில் ஜாக்ஸ், டி20 உலகக் கோப்பையில் 'ஃபினிஷர்' மற்றும் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக சிறப்பாகச் செயல்பட்டார். எட்டுப் போட்டிகளில் நான்கு முறை ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடரில் அவரது பங்களிப்பிற்காக பாண்டிங் முழுமையான 10 மதிப்பெண்களை வழங்கினார்.

பாண்டிங் பட்டியலிட்ட முதல் ஐந்து வீரர்களில், ஜாக்ஸ், சாம்சன், பும்ராவுக்கு அடுத்ததாக நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் செய்ஃபர்ட் 9 மதிப்பெண்கள் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் 9.5 மதிப்பெண்கள் பெற்று ஆகியோர் இடம்பிடித்தனர். ரன் பட்டியலில் இவர்கள் இருவரும் முதல் இரு இடங்களைப் பிடித்தனர்.

அதே சமயம், இந்தியா தனது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது. மார்ச் 8 அன்று, ஞாயிற்றுக்கிழமை, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், மும்முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்தியா படைத்தது.

Story first published: Friday, March 13, 2026, 12:35 [IST]
Other articles published on Mar 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+