Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கு ரோகித் சர்மாவே காரணம்.. அஸ்வின் கருத்து

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் புறக்கணிக்கப்பட்டதில் தனக்கு ஆச்சரியம் இல்லை என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். ரோஹித் ஷர்மாவின் ஆக்ரோஷமான அணுகுமுறையே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்திய அணியின் புதிய பவர்பிளே பாணிக்கு கில் பொருந்தாததே இந்த முடிவுக்கான அடிப்படைக் காரணம் என அஷ்வின் விளக்கமளித்துள்ளார். தற்போது, சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் விளையாட்டு பாணி இந்தியாவின் விரும்பப்படும் தொடக்க ஆட்ட அணுகுமுறைக்கு ஏற்ப அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கு முன்னதாக கில் காயமடைந்து, சஞ்சு சாம்சனுக்கு வழிவிட்டபோது, இந்த நீக்கம் வெறும் 'சடங்கு' மட்டுமே என்று அஷ்வின் உணர்ந்ததாகக் கூறினார். 2025 ஆசிய கோப்பைக்கு முன் சாம்சனுக்குப் பதிலாகக் கில் சேர்க்கப்பட்டு, சாம்சன் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார்.

இருவருமே எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படவில்லை. இருப்பினும், சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 வரை தொடர்ந்து வாய்ப்பை பெற்றார். நடப்பாண்டில் 15 இன்னிங்ஸ்களில் 291 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், 137.26 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தடுமாறினார்.

இது குறித்து பேசிய அஸ்வின், "நிச்சயமாக, ஷுப்மன் கில்லுக்கு நிறைய ஆதரவு வழங்கப்பட்டது. அவர் நேரடியாகத் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால் தேர்வாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இப்போது, இது தான் சிறந்த அணி என்பது மிகத் தெளிவாகிவிட்டது. இந்திய அணி நிர்வாகத்திடமிருந்தும் கருத்துகள் வந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் இந்தியா பவர்பிளேயில் தங்கள் அணுகுமுறையை மாற்றியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரோஹித் கடந்த உலகக் கோப்பையில் அதை நிரூபித்தார். அதே பாணியைத் தொடர அவர்கள் விரும்பியதால், சஞ்சு சாம்சனும் அபிஷேக் ஷர்மாவும் வாய்ப்பு அளித்தனர். அதையும் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார்கள்.

"உண்மையில், கில் தொடக்க வீரராக இருந்தது பொருத்தமற்றது. இதனால் அணியின் காம்பினேஷின் சிக்கல் வரும் என்று நான் முன்பே கூறியுள்ளேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. எனக்கு ஆச்சரியமில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஷுப்மன் காயமடைந்தார், அவர் காயமடைந்த விதமும், சஞ்சு அணியில் இணைந்ததும், இது நடப்பது ஒரு சடங்கு மட்டுமே" என்று அவர் குறிப்பிட்டார்.

சுவாரஸ்யமாக, 2025ல் கில்லின் பவர்பிளே ஸ்ட்ரைக் ரேட் 147.77 ஆகவும், 2024ல் சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியபோது அவரது ஸ்ட்ரைக் ரேட் 147.31 ஆகவும் இருந்தது. இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ரன்களை பெரிய ஸ்கோர்களாக மாற்றும் திறனில்தான் கில் பின்தங்கினார். தொடக்க ஆட்டக்காரராக 36 போட்டிகளில் மூன்று அரை சதங்களையும் ஒரு சதத்தையும் மட்டுமே எடுத்த அவர், பாதி ஆட்டங்களில் மூன்று சதங்களையும் ஒரு அரை சதத்தையும் சாம்சன் குவித்துள்ளார்.

Story first published: Sunday, December 21, 2025, 14:24 [IST]
Other articles published on Dec 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+