மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு பிறகு பிசிசிஐ செய்த செயல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியையும் நான்கு ரிசர்வ் வீரர்களையும் பிசிசிஐ அறிவித்தது.
இதில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு ஏன் துணை கேப்டன் பதவி என்று விமர்சனம் இருந்தது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிங்கு சிங், மெயின் அணியில் இல்லாமல் மாற்றுவீரராக ரிசர்வ் அணியில் இருக்கிறார். இதைப் போன்று ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ்க்கு டி20 உலக கோப்பை அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தொடர்ந்து டி20 போட்டியில் சொதப்பி வரும் கில்லுக்கு இடம் கிடைக்க பட்டு இருக்கிறது.
இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பல முன்னாள் வீரர்கள் பிசிசிஐ வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். instagramல் யார் அதிகம் லைக் வாங்குகிறார்களோ அவர்களுக்கு தான் அணியில் இடம் கிடைக்கிறது என ராயுடுவும், தங்களுக்கு வேண்டியவர்களுக்காக தான் அணியை தேர்வு செய்கிறார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வெளிப்படையாக விமர்சித்து வந்தனர்.
இது பிசிசிஐக்கு சிக்கலை ஏற்படுத்தியது. பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க இதனால் பதறிப்போன பிசிசிஐ இதை சமாளிக்க ஒரு பிரஸ்மீட்டை நடத்தலாம் என முடிவெடுத்தது. அதன்படி இந்திய அணி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ரோகித் சர்மா அஜித் அகார்கர் ஆகியோர் இணைந்து மும்பையில் பிரஸ்மீட் நடத்தினர்.
இதில் பல்வேறு கேள்விகளுக்கும் பல்வேறு விமர்சனங்களுக்கும் சமாளிக்கும் விதமாக பிசிசிஐ சார்பாக பதில் அளிக்கப்பட்டது. ரிங்கு சிங், ருத்ராஜ , நான்கு ஸ்பின்னர்கள் எதற்கு போன்ற பல கேள்விகள் இந்த பிரஸ்மீட்டில் கேட்கப்பட்டது அதற்கு ஒவ்வொன்றிற்கும் அஜித் அகார்கரும், ரோகித் சர்மாவும் பதில் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்த்தார்கள் .