For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை - ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார்? கிங் கோலி படைத்த சாதனை

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடர் தற்போது முடிவடைந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் விதமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அமெரிக்கா சென்று பயிற்சி செய்து வருகிறது.

இந்த தொடரில் கோப்பை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டிய உத்வேகத்தில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் இதுவரை 8 உலக கோப்பை டி20 தொடர் நடைபெற்றிருக்கிறது. இதில் ஒவ்வொரு சீசனையும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

T20 World cup - Most runs in every tournament and special place for Kohli

2007 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் 265 ரன்கள் குவித்தார். இதைப் போன்று 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை வீரர் தில்ஷான் 317 ரன்கள் எடுத்தார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே 302 ரன்கள் எடுத்தார்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் 249 ரன்கள் எடுத்தார். இதேபோன்று 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 319 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதுவரை நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை இன்று வரை விராட் கோலிக்கு தான் உள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வங்கதேச வீரர் தமீம் இக்பால் 295 ரன்கள் எடுத்தார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 303 ரன்கள் எடுத்தார். அதே போன்று 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மீண்டும் விராட் கோலி 296 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இரண்டு முறை அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை விராட் கோலிக்கு இருக்கிறது.

Story first published: Wednesday, May 29, 2024, 9:15 [IST]
Other articles published on May 29, 2024
English summary
T20 World cup - Most runs in every tournament and special place for Kohli டி20 உலககோப்பை - ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார்? கிங் கோலி படைத்த சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+