Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன சொல்ல வராரு”.. ஹர்திக் விவகாரத்தில் ரோகித்தின் திடீர் விளக்கம்.. பிசிசிஐ நிம்மதி பெருமூச்சு!

அமீரகம்: ஹர்திக் பாண்ட்யா குறித்து ரோகித் கூறியுள்ள பதிலால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், அனைவரின் கவனமும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது.

குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடி வருகிறார்கள் என்ற பார்வை இருந்து வருகிறது.

பிசிசிஐ-க்கு நிம்மதி

பிசிசிஐ-க்கு நிம்மதி

ஆட்டத்தின் தொடக்கத்தில் சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் மோசமாக சொதப்பி வந்தனர். இதில் அனைவருமே ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். குறிப்பாக கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடி கம்பேக் கொடுத்ததால் பிசிசிஐ நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

ஹர்திக் நீக்கம்?

ஹர்திக் நீக்கம்?

ஆனால் இந்திய அணியில் ஒரே ஒரு குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. பேட்டிங்கை போன்று பந்துவீச்சிலும் உதவுவார் என்ற காரணத்தினால் தான் அவர் அணிக்குள் சேர்க்கப்பட்டார். ஆனால் ஐபிஎல்-ல் அவர் ஒரு பந்துகூட வீசவில்லை. பேட்டிங்கிலும் கடைசி வரை தனது திறமையை அவர் நிரூபிக்கவில்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோரில் யாரையாவது ஒருவரை மெயின் அணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ரோகித்தின் வார்த்தைகள்

ரோகித்தின் வார்த்தைகள்

இந்நிலையில் ரோகித் சர்மா கூறியுள்ள கருத்து ஹர்திக்கிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஹர்திக்கின் நிலைமை குறித்து பேசிய அவர், ஹர்திக் பந்துவீசவில்லை என்பது உண்மைதான். அதற்காக பிசியோதெரபிஸ்ட் மற்றும் பயிற்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர் ஐபிஎல்-ல் ஒருபந்து கூட வீசவில்லை என்றாலும், நாளுக்கு நாள் அவரின் செயல்பாடு சிறப்பாகி வருகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 வாரத்திற்குள் ஹர்திக் முழுவதுமாக பந்துவீச வரலாம்.

பேட்டிங் எப்படி?

பேட்டிங் எப்படி?

ஹர்திக் பாண்ட்யா மிகச்சிறப்பான வீரர். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஹர்திக்கின் பந்துவீச்சை பார்த்தால் தான், அவரின் நிலைமை தற்போது எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும். மருத்துவர்கள் விரைவில் அதுகுறித்து கூறுவார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை ஹர்திக் சற்று பின் தங்கியுள்ளார். ஆனால் அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன். எப்படிபட்ட கடினமான சூழல்களில் இருந்தும் அவரால் மீண்டு வரமுடியும். அவரே பேட்டிங்கில் சற்று கவலையாக தான் இருக்கிறார். நிச்சயம் மீண்டு வருவார் எனக்கூறியுள்ளார்.

பிசிசிஐ குழப்பம்

பிசிசிஐ குழப்பம்

ஹர்திக் பாண்ட்யா ரோகித் சர்மாவின் கீழ் மும்பை அணிக்கு விளையாடுகிறார். தலைசிறந்த கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவே, ஹர்திக் சொதப்பிய போது தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். இதே போல இந்திய அணியிலும் ரோகித் சர்மா முக்கிய பங்கு வகிக்க போகிறார். எனவே அவரின் வார்த்தைகள் ஹர்திக் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிசிசிஐ தற்போது குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் அக்டோபர் 10ம் தேதி தெரிந்துவிடும்.

Story first published: Saturday, October 9, 2021, 20:56 [IST]
Other articles published on Oct 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+