Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் பாய்! டாஸ் வென்றால் என்ன செய்ய என கேட்ட சூர்யகுமார்.. பைத்தியமா நீ என பதில் அளித்த ரோகித்

மும்பை: டி20 உலக கோப்பை 2026-ன் தொடக்க விழா வான்கடே மைதானத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் நடனத்துடன் தொடங்கியது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக நின்று 84 ரன்கள் அடித்து அமெரிக்கா அணிக்கு கடும் அதிர்ச்சியை தந்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களின் கவர்ச்சி நிறைந்திருந்தாலும், அதிக கைதட்டல் ரோஹித் ஷர்மாவுக்கே கிடைத்தது. 2024 ஆம் ஆண்டு இந்தியாவை உலகக் கோப்பைப் பட்டத்திற்கு வழிநடத்திய பின், போட்டித் தூதராக வலம் வந்த அவருக்கு உந்றசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

களத்தில் நின்ற ரோஹித், "அணியின் கேப்டனாக இல்லாமல், களத்தின் இந்தப் பகுதியில் நிற்பது விசித்திரமாக உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். "மும்பை சா ராஜா" என முழக்கமிட்டு ரசிகர்கள் எழுந்து நின்று ரோஹித்துக்கு மரியாதை செலுத்தினர். "இங்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி. மும்பையின் ஆற்றல் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை" என்றும் அவர் கூறினார்.

ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் இணைந்து, கோப்பையை ஒருமுறை உயர்த்திப் பிடித்து, ரோஹித் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். "இதில் ஒரு உணர்ச்சிகரமான அம்சம் உள்ளது. களத்தின் இந்தப் பக்கம் நான் பார்வையாளனதக நின்று இன்னும் பழக்கப்படவில்லை. இதுபோன்ற தருணங்கள் திரும்பி வராது" என்று ரோஹித் மனம் திறந்தார்.

டாஸுக்காக அணிகள் திரண்டபோது, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தன் முன்னாள் கேப்டனும் வழிகாட்டியுமான ரோஹித் ஷர்மாவிடம் ஓடி ஆலோசனை கேட்டார். புன்னகையுடன், "ரோகித் பாய், டாஸ் வென்றால் பந்துவீசவா? பேட்டிங் செய்யவா? " என சூர்யகுமார் கேட்க, ரோஹித் தன் வழக்கமான இயல்பான பாணியில், "ஃபீல்டிங் செய், நீ என்ன பைத்தியமா " என்று கேலியாகப் பதிலளித்து அருகில் இருந்தவர்களைச் சிரிக்க வைத்தார். கிரிக்கெட் வர்ணனை பணியில் இருந்த யுஸ்வேந்திர சாஹலும் ரோஹித்தைச் சந்திக்க ஓடினார்.

டி20 உலகக் கோப்பை தொடக்க நாளின் மூன்றாவது ஆட்டத்தில், அமெரிக்கா அணி இந்தியாவைத் திடுக்கிட வைத்தது. இந்தியாவின் வலுவான பேட்டிங் வரிசையை சிதைத்து, 46/4 மற்றும் 77/6 என்ற நிலைக்குத் தள்ளி, இந்தியாவை தடுமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 17 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இழந்த அவர், வெறும் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து, அணியின் சரிவைத் தடுத்தார்.

ஒரு கடினமான ஆடுகளத்தில், சூர்யகுமார் தனது கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார், இதில் அதிரடியாக இறுதி ஓவரிலேயே 21 ரன்கள் சேர்க்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் அளித்த சவாலான இலக்கை, இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பாதுகாத்தனர். முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி, அமெரிக்க அணியின் ரன் சேஸிற்கு வாய்ப்பளிக்கவில்லை. இது வான்கடே மைதானத்தில் டி20 சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகரமாக பந்துவீசி பாதுகாக்கப்பட்ட மிகக் குறைந்த இலக்கு என்ற சாதனையை பெற்றது.

Story first published: Sunday, February 8, 2026, 13:41 [IST]
Other articles published on Feb 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+