Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை பயிற்சி ஆட்டம்.. வங்கதேசத்தை சுளுக்கு எடுத்த இந்தியா.. மாஸ் காட்டிய ரோகித் படை

நியூயார்க் : ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்கான பயிற்சி ஆட்டத்தை வங்கதேச அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் பண்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 23 ரன்கள் ஆட்டம் இழக்க, ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.

T20 world cup ind vs ban warm up match rishabh pant sanju samson virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team 20


இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும். சூரியகுமார் தன் பங்குக்கு 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே வீரர் சிவம் துபே 14 ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். ஜடேஜா நான்கு ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் தன்சீத் ஹசன் 17 ரன்களிலும், சௌமியா சர்க்கார் டக்அவுட் ஆகியும், லிட்டன் தாஸ் ஆறு ரன்களும் நஜ்முல் உசேன் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். வங்கதேசம் அணியில் ஷகிப்புல் ஹசன் 28 ரன்களும், முஹம்மதுல்லா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளும், பும்ரா இரண்டு ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும், முகமது சிராஜ் 3 ஓவர் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா மூன்று ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டையும், அக்சர் பட்டேல் இரண்டு ஓவர்கள் வீசி 10 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் சிவம் துபே 3 ஓவர்கள் வீசி 10 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்து எதிர்கொள்கிறது.

Story first published: Sunday, June 2, 2024, 0:17 [IST]
Other articles published on Jun 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+