
பாகிஸ்தான் போட்டி
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் அக்டோபர் 23ம் தேதியன்று மதியம் மெல்பேர்னில் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை ஆனால் பும்ராவுக்கு மாற்று, சுழற்பந்துவீச்சில் எந்த ஜோடிக்கு வாய்ப்பு என ப்ளேயிங் 11ல் பிரச்சினை நீடித்து வருகிறது.

ப்ளேயிங் 11 உறுதி
இந்நிலையில் இந்தியாவின் ப்ளேயிங் 11 ஏற்கனவே இறுதி செய்துவிட்டதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கடைசி நேர முடிவுகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அணி வீரர்களுக்கு முன்கூட்டியே ப்ளேயிங் 11 குறித்து தகவல் தெரிவித்தால் தான் அவர்களால் தயார் செய்துக்கொள்ள முடியும். இல்லையெனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற பதற்றத்தில் இருப்பார்கள்.

தயாராகிவிடுவோம்
முக்கியமான போட்டிகளில் கடைசி நேரத்தில் சென்று ஒரு வீரரிடம் ' நீ விளையாடுகிறாய்' என்று சொல்வது தவறு. எனவே இனி வரும் பயிற்சி போட்டிகளில் ப்ளேயிங் 11 தேர்வுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து தான் விளையாடுவோம். பாகிஸ்தான் போட்டிக்குள் இந்திய அணியின் காம்பினேஷன் முற்றிலுமாக சரியாகிவிடும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியா பழிதீர்க்குமா?
இந்திய அணி கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே அதற்கு பதிலடி கொடுப்பதற்காக கடும் பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்ததாக வரும் அக்டோபர் 17 ஆஸ்திரேலிய அணியுடனும் 19ம் தேதியன்று நியூசிலாந்து அணியுடனும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications