Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற வழியே இல்லையா?? முகமது ஷமியால் சிக்கலில் மாட்டிய இந்திய அணி.. இன்னும் 2 போட்டிகள் தான் உள்ளதாம்

பெர்த்: இன்னும் இரண்டு போட்டிகளை மட்டுமே வைத்து இந்திய அணியின் தலைவிதியை மாற்ற பிசிசிஐ முற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் கடைசி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்திய அணி ஒருபுறம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், மற்றொருபுறம் பும்ராவுக்கு மாற்று யார் என தெரியாமல் உள்ளது.

 மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

மாற்று வீரருக்கான ரேஸில் இருந்த முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தங்களது முழு உடற்தகுதியையும் நிரூபித்துவிட்டனர். தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-ன் அனுமதி பெற்ற இவர்கள் மூவரும் இன்று காலை ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர்.

ஷமி மீது எதிர்பார்ப்பு

ஷமி மீது எதிர்பார்ப்பு

இவர்கள் மூன்று பேரில் முகமது ஷமிக்கு தான் மாற்று வீரராக தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் முகமது ஷமி ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. இதுமட்டுமல்லாமல் காயம், கொரோனா பாதிப்பு ஆகியவற்றில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளதால் இவரின் ஃபார்ம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

2 போட்டிகள் தான்

2 போட்டிகள் தான்

முகமது ஷமி மீது வைத்த நம்பிக்கையை நிரூபிப்பதற்கு இன்னும் 2 போட்டிகளே உள்ளன. இந்திய அணி அடுத்ததாக வரும் அக்டோபர் 16ம் தேதி மற்றும் அக்டோபர் 18ம் தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் மோதுகிறது. இந்த இரண்டு போட்டியிலும் ஷமி தனது திறமையை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

இக்கட்டான நிலைமை

இக்கட்டான நிலைமை

முகமது ஷமியை முதல் சில போட்டிகளிலும் உட்கார வைக்க முடியாது. ஏனென்றால் இந்திய் அணியில் தற்போது 140+ வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடிய பவுலராக அர்ஷ்தீப் சிங் மட்டுமே இருக்கிறார். மற்றவர்கள் 130 - 140 வேகத்தில் வீசக்கூடிய மீடியம் பேஸ் பவுலர்கள் ஆகும். எனவே வேகமான ஆஸ்திரேலிய களத்தில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய முகமது ஷமி முதலில் இருந்தே தேவை. குறிப்பாக முதல் போட்டியே பாகிஸ்தானுடன் என்பதால் அவர் நிச்சயம் தேவை.

Story first published: Thursday, October 13, 2022, 10:15 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+