Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் பெரிய வீக்னஸ்.. 2 பயிற்சி போட்டிகளிலும் தெரியவந்த உண்மை.. டி20 உலகக்கோப்பையில் ஷாக்!

பெர்த்: டி20 உலகக்கோப்பையை எதிர்கொள்வதில் இந்திய அணி பலவீனமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலிய உள்நாட்டு அணியுடனான 2 பயிற்சி போட்டிகளையும் இந்திய அணி இன்று முடித்தது.

முதல் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதும், 2வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

இந்தியாவின் பலவீனம்

இந்தியாவின் பலவீனம்

முதலில் பேட்டிங் செய்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 168/6 ரன்களை குவிக்க, இந்திய அணி 132/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டிகளின் மூலம் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக அமைந்துவிட்டது தெரிகிறது. ஆனால் பேட்டிங்கில் தயாராகவே இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. மற்ற நாடுகளில் கலக்கும் இந்தியாவின் பேட்டிங் படை இன்னும் ஆஸ்திரேலியா போன்ற வேகமான களத்தில் திணறுகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் சர்மா 2வது போட்டியில் ஆடவில்லை. இதனால் ஒட்டுமொத்த அழுத்தமும் கே.எல்.ராகுல் மீதுதான் திரும்பியது. 168 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியதில் அனைவருமே அதிரடி காட்ட தான் முயன்றனர். ரிஷப் பண்ட் 9 (11), தீபக் ஹூடா 6 (9) என மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தையே கொடுத்தனர். நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்ட்யா 2 சிக்ஸர்களை அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார். தினேஷ் கார்த்திக் 14 பந்துகளை சந்தித்து 10 ரன்களையே அடித்து வெளியேறினார்.

பொய்யான திட்டம்

பொய்யான திட்டம்

தான் தூண் போன்று நிலைத்து நின்றால் மற்ற வீரர்கள் அதிரடி காட்டுவார்கள் என நம்பிய கே.எல்.ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஸ்ட்ரைக் ரேட்டில் குறைந்த அவர் 55 பந்துகளில் 74 ரன்களை அடித்தார். இந்தியாவில் அதிரடி காட்டிய வீரர்கள் ஆஸ்திரேலிய களத்தில் ரன் அடிக்க முடியாமல் திணறினர். பந்தின் வேகத்தை கணித்து ஆட முடியாமல் போனது தெளிவாக தெரிந்தது.

கடைசி நம்பிக்கை

கடைசி நம்பிக்கை

தற்போதைக்கு இந்திய அணிக்கு நம்பிக்கையாக இருப்பது விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே. இவர்கள் இருவரும் சரிந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் காணும் எனத் தெரிகிறது. இதற்கு சான்று, ஆஸ்திரேலிய களத்தில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 160 ரன்களை கூட தாண்டாதது தான்.

Story first published: Thursday, October 13, 2022, 18:43 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+