Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வீரர்களுக்கு காயம்? இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி.. டி20 உலகக்கோப்பையில் பின்னடைவா?

அமீரகம்: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து 2 வீரர்கள் காயம் காரணமாக வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.

இதன் பின்னர் அடுத்த 2 நாட்களில், அக்டோபர் 17ம் தேதி டி20 உலக கோப்பை தொடரானது தொடங்கவிருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

காலக்கெடு

காலக்கெடு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான 18 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி வரை அணிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமென்றால் அதனை செய்து இறுதிப்பட்டியலை சமர்பிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா என தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் இந்திய அணியிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேற்று அக்‌ஷர் படேலுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இணைக்கப்பட்டார்.

2 வீரர்களுக்கு காயமா?

2 வீரர்களுக்கு காயமா?

இந்நிலையில் இந்திய அணியில் மேலும் 2 வீரர்கள் காயம் காரணமாக வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீரர்களின் விவரங்கள் எதையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆலோசகர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் பிறகு மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.

தமிழக வீரர்

தமிழக வீரர்

அந்த இரண்டு வீரர்களில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் ஒருவர் எனத் தெரிகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது சிரமப்படுவதாக தெரிகிறது. எனவே அவர் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் மாற்று வீரர்களுக்காக ஹர்ஷல் பட்டேல்,வெங்கடேஷ் ஐயர், ஷிவம் மாவி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. எனவே நிச்சயம் அதிரடி அறிவிப்பு ஒன்று வரவுள்ளது உறுதியாகியுள்ளது.

Story first published: Thursday, October 14, 2021, 15:05 [IST]
Other articles published on Oct 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+