“அணிக்குள்ளேயே 2 குரூப்பா”.. பேட்டிங் மாற்றத்தில் ரோகித்துக்கும் பங்கு உண்டு.. போட்டுக்கொடுத்த கோச்!
அமீரகம்: இந்திய அணியின் சொதப்பலில் ரோகித் சர்மாவுக்கும் பங்கு இருப்பதாக பேட்டிங் கோச் உண்மையை உடைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளை பெற்று ஏமாற்றம் கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு நியூசிலாந்துடனான தோல்வி மேலும் சூடாக்கியது.

அதிரடி மாற்றங்கள்
இந்த போட்டியில் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாகவே பிட்ச் இருந்தபோதும், இந்திய அணி வீரர்கள் ஏமாற்றினர். இதற்கு காரணம் இஷான் கிஷானை ஓப்பனிங்கிற்கு கொண்டு வந்தது. ஓப்பனிங் வீரர்களாக இஷான் கிஷான் - கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதனால் ரோகித் சர்மா 3வது வீரராகவும், விராட் கோலி 4வது வீரராகவும் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சொதப்பல்
இதில் இந்திய அணி போட்ட முக்கிய திட்டமான இஷான் கிஷானே சொதப்பியதால், வரிசை மாறி களமிறங்கிய மற்ற வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி தந்தனர். ரோகித் - இஷான் ஆகியோர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஓப்பனிங் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். குறைந்தபட்சம் அவர்களை அனுப்பியிருந்தால் கூட களத்தில் ரோகித் யோசனை வழங்கியிருந்திருப்பார். இதனால் விராட் கோலி மீது ரசிகர்கள் கடும் கோபத்துடன் விமர்சனங்களை வாரி குவித்து வருகின்றனர்.
Recommended Video

விக்ரம் ரத்தோர் விளக்கம்
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றியதில் ரோகித் சர்மாவின் பங்கும் உள்ளது என விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எங்கள் அணியின் திட்டங்களை கடந்த 2 போட்டிகளிலுமே செயல்படுத்த முடியவில்லை, அதுதான் வலிக்கிறது. சூர்யகுமார் யாதவுக்கு முதுகுப்பகுதியில் பாதிப்பு இருந்ததால் அவரை களமிறக்க முடியவில்லை. இதனையடுத்து ஒட்டுமொத்த அண் நிர்வாகமும் அடுத்ததாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை மேற்கொண்டோம்.

ரோகித் இருந்தார்
அதில் இளம் வீரர் இஷான் கிஷானை ஓப்பனிங் இறக்கினால் சிறப்பாக இருக்கும் என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் துணைக்கேப்டன் ரோகித் சர்மாவும் உடன் இருந்து சம்மதம் தான் தெரிவித்தார். இதனால் கோலியை தனிப்பட்ட விதமாக யாரும் விமர்சிக்க வேண்டாம் என மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications