Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“யோவ்.. உனக்கு குசும்பு அதிகம்தான்”.. பத்திரிகையாளர் சந்திப்பில் ரோகித்தின் செயல்.. வைரலாகும் வீடியோ

அமீரகம்: செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரோகித் சர்மா அளித்த குறும்புத்தனமான பதில்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளை பெற்ற நிலையில் கடந்த ஆஃப்கானிஸ்தானுடன் தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதல் 2 போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்டிங் செய்த தவறுகள் இந்த போட்டியில் சரிசெய்யப்பட்டது.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

இந்த போட்டி முடிந்த பிறகு தான் ரசிகர்களுக்கு சுவாரஸ்ய விஷயமே காத்திருந்தது. அதாவது ரோகித் சர்மா எப்போதுமே பத்திரிகையாளர் சந்திப்புக்கு செல்லும் போது வேடிக்கையான விஷயங்கள் நடைபெறும். அந்தவகையில் கடந்த போட்டியின் போது அஸ்வின் குறித்து நிரூபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ரோகித் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா அதிரடி காட்டியிருந்தார். மொத்தம் 47 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டி முடிந்த பின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த ரோகித் சர்மா, இதுதான் பிரஸ் மீட்டா என்பது போல அங்கு எத்தனை நிருபர்கள் உள்ளனர் என எண்ணிப்பார்த்து கிண்டல் செய்தார்.

Recommended Video

India Team ட்ரெஸ்ஸிங் பெரிய ரூமில் குழப்பம் இருக்கு - முன்னாள் வீரர் சொன்ன தகவல்
ரோகித் குறும்புத்தனம்

ரோகித் குறும்புத்தனம்

பின்னர் அவரிடம், அஸ்வின் 2017ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்பட்டார். இந்த இடைபட்ட காலங்களில் நீங்கள் அஸ்வினிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளீர்களா? என்ன பேசியுள்ளீர்கள் எனக்கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மிகவும் சீரியஸாக யோசித்த ரோகித், அஸ்வினுக்கு இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் அழகான மகள் உள்ளார். எனவே அவர்களை எந்த பூங்காவிற்கு அழைத்து செல்லலாம் என தீவிரமாக ஆலோசித்துள்ளோம். ஆனால் ஒருபோதும் போட்டி குறித்து பேசியதில்லை என கூறினார். இதனை கேட்டவுடன் அருகில் இருந்த அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சிக்கல்

இந்தியாவுக்கு சிக்கல்

இந்த தொடரில் இதுவரை இந்தியா ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இன்று ஸ்காட்லாந்து அணியையும் வரும் அக்.8ம் தேதி நமிபியாவையும் எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளிலுமே அதிக ரன் ரேட்டுடன் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 5, 2021, 16:59 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+