பிராவோ "பாக்கெட்டில்" 300 டி20 விக்கெட்கள்!
டெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந் வேயன் பிராவோ, டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களைச் சாய்த்து அசத்தியுள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் எடுத்த 4 விக்கெட்களையும் சேர்த்து அவர் தற்போது 300 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் 299 விக்கெட்களுடன் லசித் மலிங்கா உள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களில் அஸ்வின் மட்டுமே டாப் 15 பட்டியலில் உள்ளார். அவர் 180 விக்கெட்களை எடுத்துள்ளார்.
300 விக்கெட்களைத் தொட்ட முதல் பந்து வீ்ச்சாளரும் பிராவோதான் என்பது முக்கியமானது.

குஜராத் லயன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அருமையான ஆல் ரவுண்டராக வலம் வந்த பிரோவோ இந்த சீசனிலிருந்து குஜராத் லயன்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

முதல் போட்டியிலேயே முத்திரை
நேற்று நடந்த தனது முதல் போட்டியிலேயே அவர் 4 விக்கெட்களைச் சாய்த்து கலக்கினார். அவரது பந்து வீச்சின் காரணமாக எதிர்த்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெரும் ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல் போய் விட்டது.

300 விக்கெட்கள்
நேற்று வீழ்த்திய 4 விக்கெட்களையும் சேர்த்து இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 300 விக்கெட்களைத் தொட்டுள்ளார் பிராவோ. இது புதிய சாதனையாகும்.

டேவிட் மில்லர்
அவரது 300வது விக்கெட்டாக வந்து சேர்ந்தவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் மில்லர். பிராவோ போட்ட ஸ்லோ யார்க்கரை சமாளிக்க முடியாமல் அவுட்டானார்.

அஸ்வின் 15வது இடத்தில்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய பந்து வீச்சாளர்கள் டாப் 15 இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். அவர் அஸ்வின். 180 விக்கெட்களுடன் 15வது இடத்தில் இருக்கிறார் அஸ்வின்.


Click it and Unblock the Notifications