Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20WorldCup: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. பொல்லார்ட் தலைமையில்... முழுவதுமாக அதிரடி வீரர்கள்!

சென்னை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா அணி முதல் ஆளாக வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியிட்டன. இந்திய அணி வீரர்களின் விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதே போல தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகள் தங்களது அணியை அறிவித்தன.

வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ்

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், தங்களின் டி20 உலகக் கோப்பை அணியை அறிவித்துள்ளது. கெயிரன் பொல்லார்ட் தலைமையிலான இந்த அணியில் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான சுனில் நரேனின் பெயர் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

போட்டிகள் நடைபெறும் ஐக்கிய அரபு அமீர மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது ஆகும். அதன்படி பார்த்தால் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய ஸ்பின்னரான நரேனின் பெயர் இடம்பெறாதது அந்த அணிக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கான பதிலடியை அவர் ஐபிஎல் தொடரில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணி

கெய்ரன் பொல்லார்ட் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், பாபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரஸ்டன் சேஸ், ஆண்ட்ரே ப்ளட்செர், சிம்ரோன் ஹெட்மையர், எவின் லீவிஸ், மெக்கோய், ரவி ராம்பால், ஆண்ட்ரே ரஸல், சிம்மன்ஸ், ஓசானே தாமஸ், ஹெய்டன் வால்ஸ்.

ரிசர்வ் வீரர்களாக ஜேசன் ஹோல்டர், அகில் ஹோசைன், செல்டோன் கார்ட்ரேல், டேரன் ஷமி.

Story first published: Friday, September 10, 2021, 16:34 [IST]
Other articles published on Sep 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+