For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் எங்களுக்கு முக்கியமல்ல..! சும்மா அதையே பேசாதீங்க..! கோலி கொளுத்தி போட்ட சர்ச்சை

Recommended Video

பல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ

ஆன்டிகுவா: ரோகித் என்ற தனி நபரை விட, அணிக்கான தேவையும், நலனுமே முக்கியம் என்பதால் அவர் டெஸ்டில் சேர்க்கப்படவில்லை என்று கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றி லேசுப்பட்ட வெற்றி அல்ல. அது ஒரு வரலாற்று வெற்றி.

அதுவும் அந்திய மண்ணில் ஒரு வெற்றி என்பதை வெகு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது கொண்டாடப்பட வேண்டிய வெற்றி என ரசிகர்கள் பூரிப்படைந்துள்ளனர். முதல் டெஸ்ட் பேசப்பட வேண்டிய அதே நேரத்தில் முக்கயி வீரர்களின் நீக்கம் பற்றி ரசிகர்கள் பேசுவதை நிறுத்தவில்லை.

நீக்கப்பட்ட ரோகித்

நீக்கப்பட்ட ரோகித்

அதில் முக்கியமான ஒன்று ரோகித் சர்மாவின் நீக்கம். அந்த டெஸ்டில் அவர் சேர்க்கப் படவில்லை. அது பெரிய ஆச்சரியத்தை அளித்தது என்பதைவிட, முக்கியமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது. பல ஜாம்பவான்களும் இதற்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

பலர் கருத்து

பலர் கருத்து

ரோகித்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். ரோகித் இல்லாத அணியால் அசாருதீனும் அதிருப்தி அடைந்தார். அவர்கள் மட்டுமல்லாது, சேவாக், அக்தர் ஆகியோர், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரோகித்தை களத்தில் இறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

முட்டாள்தனமானது

முட்டாள்தனமானது

ரோகித் போன்ற ஒரு திறமையான வீரரை ஆடும் லெவனில் எடுக்காமல் இருப்பது முட்டாள் தனம். கண்டிப்பாக சேர்க்க வேண்டுமென்று, பாக். முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் சொன்னது எதுவும் நடக்கவில்லை. ரோகித் நீக்கப்பட்டிருந்தார்.

நெருக்கடியில் கோலி

நெருக்கடியில் கோலி

இது பல கட்டங்களில் சர்ச்சையையும், பெரும் விவாதத்தையும் கிளப்பியது. டெஸ்டில் வெற்றி பெற்றுவிட்டாலும் ரோகித் விவகாரம் முற்று பெறவில்லை. தொடர்ந்து எதிர் கருத்துகள் வந்து கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் கேப்டன் கோலி.

அணியின் காம்பினேஷன்

அணியின் காம்பினேஷன்

அவர் கூறியிருப்பதாவது: பொதுவாக அணியில் காம்பினேஷன் என்பது ரொம்ப முக்கியம். ஹனுமன் விஹாரி அருமையான பார்ட் டைம் பந்துவீச்சாளர். போட்டியின் இடையே சில ஓவர்களை வீசுவார். எனவே அவரை செலக்ட் செய்தோம்.

வழக்கமான ஒன்று

வழக்கமான ஒன்று

இது அனைவரும் விவாதித்து, அணியின் நலனுக்கு எது முக்கியமோ அதை தான் செய்திருக்கிறோம். ஆடும் லெவன் குறித்த விமர்சனங்கள் வருவது வழக்கமான ஒன்று. ஆனால், அதையே நினைத்து கொண்டிருக்க முடியாது. ஓர் அணி என்றால் அதன் தேவையும், அணியின் நலனுமே ரொம்ப முக்கியம் என்றார்.

அதிருப்தியில் ரசிகர்கள்

அதிருப்தியில் ரசிகர்கள்

ஆனால் அவரது கருத்தை ரசிகர்கள் வேறு மாதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதாவது, கேப்டன் ரேசில், கோலி, ரோகித் இடையே ஒரு பந்தயம் ஓடிக் கொண்டிருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளின் போது எல்லாம் ரோகித்தை கழற்றிவிட்டுவிட்டு, அணியின் மீது கோலி பழி போடுகிறார். ரோகித் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மென். அவரை புதுவீரருடன் ஏன் ஒப்பிட்டு பேச வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

Story first published: Tuesday, August 27, 2019, 12:01 [IST]
Other articles published on Aug 27, 2019
English summary
Team combination is important says skipper kohli about rohit exit in test against West Indies.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+