என்னங்க சொல்றீங்க.. ராகுல் டிராவிட்டின் உடல்நிலை.. வெளியான முக்கிய அப்டேட்.. 3வது ODIல் இருப்பாரா?
திருவனந்தபுரம்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்ட சூழலில் அவரின் தற்போதைய நிலை குறித்து பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் பேசியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. 2 வெற்றிகளுடன் இந்தியா தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் 3வது போட்டி நாளை நடக்கிறது.
இந்த போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராவிட்டின் உடல்நிலை
வீரர்கள் அனைவரும் போட்டிக்காக தயராகி வந்த சூழலில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ஹோட்டலில் இருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அவசர அவசரமாக சொந்த ஊர் பெங்களூருவுக்கு சென்றதாக தகவல் வெளியானது. மேலும் 3வது போட்டியின் போது அவர் இருக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.

புதிய தகவல்
இந்நிலையில் ராகுல் டிராவிட் குறித்து பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அப்டேட் கொடுத்துள்ளார். அதில், அவர் மிகவும் சூப்பராக இருக்கிறார் பாஸ். அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் எங்கிருந்து தவறாக வந்தது என தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். 50 வயதாகும் அவர் மைதானத்தில் ஓடவிட்டு காண்பிக்க வேண்டுமா? அதை பார்க்க நினைக்கிறீர்களா? ராகுல் டிராவிட்டிற்கும் உடற்தகுதி தேர்வுவேண்டுமானாலும் நடத்திவிடலாம்.

எங்கே இருக்கிறார்?
விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றுவிட்டாரா? 3வது போட்டியில் இருக்கமாட்டாரா என்ற கேள்விக்கும் விளக்கம் தந்தார். அதில், ராகுல் டிராவிட் தற்போது திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார். அணி வீரர்களுடன் பயிற்சி களத்தில் இருக்கிறார். எனவே அவர் பங்கேற்பாரா என்ற குழப்பமே யாருக்கும் தேவையில்லை என விக்ரம் கூறியிருக்கிறார்.

அணி மாற்றம்
இது ஒருபுறம் இருக்க, 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனத்தெரிகிறது. பணிச்சுமை காரணமாக சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டுவிட்டு, இஷான் கிஷானும் சூர்யகுமார் யாதவும் சேர்க்கப்படலாம். இதே போல வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் அணிக்குள் வரலாம் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications